All Blog Posts
-
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு சரியா?
அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது! அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது! அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது! ஆணும், பெண்ணும் அறிவாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள்! ஆண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும், பெண்களால் புரிந்துகொள்ள முடியாது! பெண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது!காரணம் ஆணுடைய அறிவும், பெண்னுடைய அறிவும் வேறு வேறு! இது என்னுடைய ஆய்வின் முடிவு. இது அறிவியல் உண்மை. இதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் புரியவில்லை என்றால் நம்புங்கள். உள்ளாட்சி…
-
நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது
நீதி, சட்டத்தை ஆதாரமாக வைத்திருக்கும் நம் நாட்டில், சட்டத்தை உருவாக்கக்கூடிய எம் எல் ஏ, எம் பி, யை குற்றவாளிகளாக தேர்ந்தெடுத்துவிட்டு, நீதியை, நீதிபதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேடிக்கையாக உள்ளது. நீதிமன்றம், நீதியை நிலைநாட்டுகின்ற இடம் அல்ல, அது சட்டத்தை செயல்படுத்தும் இடம். அங்கு நீதி கிடைக்காது. சட்டத்தை உருவாக்குகின்ற சட்டமன்றமும், நாடாளுமன்றமும் தான் நீதிமன்றம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் அங்கு நீதிபதிகள் என்பதை, மக்கள் புரிந்து கொண்டால் நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் நீதி அனைவருக்கும்…
-
வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…
-
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன்…
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது. திமுக வின்…
-
பெரியார்
பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. சமத்துவத்தை விரும்பும் பெரியார் தன்னை மற்றவர்கள் சாமி என்றே அழைக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.பெரியார்..,அவருடைய பெயரை பொருளற்ற அடையாளமாகவே பார்த்ததால்தான் அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. ஏழுமலை என்ற பெயரை எந்த மொழியில் எழுதினாலும் ஏழுமலை தான்.…
-
சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள்
சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைப்பது போல் மத கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மதசார்பு இல்லா தமிழக அரசு விரும்பினால் பலரின் பெயர்களை புதிதாக வைக்க வேண்டி இருக்குமே,எந்தப் பெயர் யாருக்கு என்று புரிந்து கொள்வதில் பெரிய குழப்பமாகிவிடுமே!இறந்தகால நிகழ்வுகளை மாற்றமுடியாது என்று பகுத்தறிவாளர்களுக்கு தெரியாதா?உள்ளதை உள்ளபடியே மாணவர்களுக்கு சொள்வதுதான் சரியான கல்வி.
-
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவு விழிப்புணர்வு செய்தால் குற்றமாக தெரிகின்றது இன்றைய காவல்துறைக்கு. “யாமிருக்க பயமேன் “ இது வெறும் வார்த்தையல்ல மந்திரம், துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பார் என்று ஒருவர் நம்பினால் அதை யாரும் பாழ்பண்ணக்கூடாது. என்னை கடவுள் காப்பார் என்று நான் நம்பினால் அது…
-
படித்தவன்
தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.
All Tags
அறிவின்_தோற்றம், அறிவுரை, தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, மனமும்_உணர்வும், அரசுமொழி_அந்தஸ்து, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, பெரியார், திருமணமும்_குடும்பமும், பகுத்தறிவு_விமர்சனம், மறுப்புக்_கட்டுரை, குமார்_விதிகள், குற்றமும்_தண்டனையும், குற்றப்_பொறுப்பு, BJP, நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மதமும்_சடங்கும், மாநில_உரிமை, உச்ச_நீதிமன்றம், இந்தி_திணிப்பு, இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அறிவுத்_தற்பெருமை, அறிவு_உணர்வு_மோதல், மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், இயற்கையின்_நீதி, உணர்வுக்_கட்டுப்பாடு, திருமணத்திற்கு_முந்தைய_காதல், கற்பு, அரசியலமைப்புச்_சட்டம், ஊடகமும்_கலையும், ஏழாவது_அறிவு, நிர்வாகமும்_ஊழலும், சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நான்_எனும்_உணர்வு, நீதிமன்ற_அதிகாரம், புத்தக_வாசிப்பு, மூளைச்சலவை, ஊடக_நேர்மை, திமுக, கல்விக்_கொள்கை, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, தன்_மதிப்பு, உழைப்பு, உள்_ஒதுக்கீடு, ஸ்டாலின், கோயில்_சடங்கு, மும்மொழிக்_கொள்கை, பாலியல்_குற்றம், இளையராஜா, அம்பேத்கர், நட்பும்_உறவும், திருமண_வாழ்க்கை, வாக்கு_வங்கி, தோல்வியை_எதிர்கொள்ளல், ஆன்மீக_வணிகம், திருக்குறள், கலப்புத்_திருமணம், தேர்தல்_பணம், திருமாவளவன், பெண்_ஆண்_வேறுபாடு, பாமக, இலவசத்_திட்டம், அப்துல்_கலாம், ஜெயலலிதா, ஒன்றிய_அரசு, சனாதன_தர்மம், மோடி, தேர்தல்_ஆணையம், NLC, ஜக்கி_வாசுதேவ், லஞ்சம், சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், மது_பழக்கம், கருணாநிதி, பெற்றோர்_பிள்ளை_உறவு, பொதுப்_பணி_தரம், NLC_நிலப்_பிரச்சினை, கால்_தொடும்_வழக்கம், வரிக்_கொள்கை, NEET, கல்வி_மொழி, காவல்துறை, விவசாய_மானியம், வைரமுத்து, போட்டி_மனப்பான்மை, விவேகானந்தர், விஜய், காந்தி, ரஜினிகாந்த், வள்ளலார், காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, ஏ_ஆர்_ரகுமான், மாணவர்_நெருக்கடி, சீமான், Buddha, அதிமுக, காங்கிரஸ், சாதிக்_கணக்கெடுப்பு, காமராசர், திருவள்ளுவர்
