மனமும்_உணர்வும்
-
நம்முடைய செயல்கள் உணர்வின் வெளிப்பாடா?அறிவின் வெளிப்பாடா?
உலக மக்கள் அனைவரும் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய கட்டுரை இது,நாம் முதலில் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும், நம்மைப் பற்றி புரிந்து கொண்டால்தான் மற்றவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம்மை நம்முடைய உணர்வும், அறிவும் தான் இயக்குகின்றது, உணர்வு பிறப்பின் மூலம் மரபணு வழியாக நமக்கு வருவதால் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவர் உணர்வும் வேறுபட்டு இருக்கும், குறிப்பாக ஆண் உணர்வு பெண் உணர்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.எனவே ஆணின் அறிவும் பெண்ணின்…
-
விஜயின் தேர்தல் வெற்றிக்கு எது காரணம்!
இது அரசியல் கட்டுரை அல்ல, வாக்கு அளித்தவர்கள், அளிக்காதவர்கள் அனைவருக்கும் ஆன விழிப்புணர் கட்டுரை படித்து பயன்பெறுங்கள்.நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தில் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன் அதை படித்துவிட்டு இதை படித்தால் தெளிவாக புரியும்.லிங்கை தொட்டு “குமார் விதிகள்”புத்தகத்தை படிக்கவும். https://www.vijayakumaran.in/kumar-vidhigal விஜய்யின் வெற்றிக்கு அவருடைய ரசிகர்களின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று அனைவரும் சொல்கின்றார்கள், அதை தாண்டி யாராலும் சிந்திக்க முடியவில்லை காரணம் அறிவை பற்றிய புரிதல்…
-
பயம்
யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…
-
பாத பூசை
திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள் இறைவன் போட்ட பிச்சை, தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் கால்களை தொட்டு வணங்கி இறைவனுக்கு நன்றி சொல்லாத பெற்றோர்களே இல்லை. நாம் பிறக்கும் போதே பய உணர்வோடு தான் பிறக்கின்றோம் அதன் காரணத்தால் நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்தால் நமக்கு பயம்…
-
துன்பத்திற்கு மருந்து ஞானம்
அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்!அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால் இந்த கட்டுரையை படித்து பயன்பெறுங்கள், இதை உங்களுக்காக தான் எழுதி இருக்கின்றேன். அறிவில் இரண்டு வகை உண்டு, நான் என்ற உணர்வின் ஆளுமையில் ஐந்து அறிவு மூலம் பகுத்து அறிந்து வாழ்வதற்கு தேவையான அறிவை பெறுவது முதல் வகை. நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டும், வாழ்வதற்காக…
-
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரியாதவர்கள் தான் குடிக்கின்றார்களா !
“மது அருந்துவது உடன் நலத்திற்கு தீங்கானது “என்று மது குடுவையில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு எத்தனை பேர் குடியை நிறுத்திவிட்டார்கள் ?இல்லை என்றால் ஏன் தொடர்ந்து அச்சிட வேண்டும் ?இது அரசின் கடமை நான் சொல்வதை நீ கேட்க மாட்டாய் இருப்பினும் நான் சொல்வது எனது கடமை என்பதின் வெளிப்பாடே இது. மதுவுக்கு எதிராக பல அரசியல் கட்சிகள் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவது மக்களை மது போதையில் இருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அல்ல, தன்னுடைய அரசியல்…
-
மதுவிலிருந்து விடுதலை…
மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும், அறிவும் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி பரிசோதித்து விட்டேன் இந்த கட்டுரையை படித்துவிட்டு கெட்ட பழக்கங்களில் இருந்து பலர் மீண்டு இருக்கின்றார்கள்,எனவே அனைவரும் இதை படித்து பயன்பெறுங்கள். நம்முடைய சிந்தனையும், செயலும் நாம் பெற்றிருக்கும் உணர்வையும், அறிவையும்…
-
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உன்னை விட உயர்ந்தவன், நீ என்னை விட தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு,ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சியும் உணர்வின் வெளிப்பாடு. உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் !…
-
வெற்றியும், தோல்வியும்…
வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.
