தோல்வியை_எதிர்கொள்ளல்
-
தோல்வியும், துன்பமும் நிரந்தரம் அல்ல!
தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விபட்டு அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.இந்த கட்டுரையை படித்துவிட்டு குறைந்தது ஒரு இளைஞர் தன் முடிவை மாற்றிக் கொண்டால் அந்த புண்ணியம் அவருக்கு பகிர்ந்த நபருக்கே போய் சேரும். வெற்றியும்,தோல்வியும் இரண்டு பாதைகள், வெற்றியின் பாதையில் சென்று துன்பத்தை சென்றடைந்தவர்களும் உண்டு,தோல்வியின் பாதையில் சென்று இன்பத்தை…
-
வெற்றியும், தோல்வியும்…
வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள்,…
-
விளையாட்டு
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் நம் நாட்டுக்கு தேவையா?அதனால் நாட்டுக்கு என்ன பயன்? விளையாட்டு, விளையாட்டாக இருந்தால்தான் அது விளையாட்டு. விளையாட்டு போட்டியாக மாறி விட்டால் அது விளையாட்டு அல்ல, அது பொருளாதாரம் சார்ந்த தொழில். தமிழில் விளையாட்டு என்ற சொல் அற்புதமான சொல், இந்த சொல்லுக்கு பொருத்தமாக ஆங்கிலத்தில் sports என்று சொல்லாமல் fun என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். விளையாட்டில் எந்த ஒரு கடமையையும் சுமக்காமல் சுகமாக அனுபவித்து விளையான்டால் தான் அது…
-
நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி
வெற்றிக்கு முதல் படி முயற்சி !முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை !நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் !தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்கு பிடித்ததை நாம் அடைவதில் தான் உள்ளது.
-
என்னை வழிநடத்தும் ஆறுதல்களும், உபதேசங்களும்
ஆறுதல் என்பது நோய்க்கு மருந்து போன்றது, உபதேசம் என்பது வளர்ச்சிக்கு வைட்டமின் போன்றது, இந்த இரண்டையும் யார் சரியாக பயன்படுத்தி கொள்கின்றார்களோ, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். நான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விட்டதால், தன்னம்பிக்கையை இழந்து மிகவும் சோகத்தில் இருந்தேன். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த அப்பாவின் நண்பர் எனக்கு ஆறுதலாக நீ பெரிய அறிவாளி, உன்னிடம் திறமைகள் அதிகம் இருக்கு,“வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அறிவாளியும் இல்லை,…
