ஞானத்தின்

நுழைவாயில்

Latest Writing

  • நம்முடைய செயல்கள் உணர்வின் வெளிப்பாடா?அறிவின் வெளிப்பாடா?

    உலக மக்கள் அனைவரும் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய கட்டுரை இது,நாம் முதலில் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும், நம்மைப் பற்றி புரிந்து…


  • அவனுக்கு அறிவு இருக்கா?

    அவனுக்கு அறிவு இருக்கா? இவனுக்கு அறிவு இருக்கா? என்று ஒவ்வொருவரும் மற்றவர்களின் செயலைப் பார்த்து கேள்வி கேட்கிறோம் ஆனால் நமக்கு அறிவு இருக்கா…


  • படிக்காதவன்

    இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய மகனின் நண்பன் தான் காரணம். என்னுடைய மகன் பொறியியல் படித்த அவனுடைய நண்பனிடம் என்னுடைய வலைதளமான…


  • வாழ்க்கை

    வாழ்க்கை என்றால் என்ன? எதற்காக நாம் பிறந்தோம்? எதை நோக்கி நம் வாழ்க்கை பயணம் இருக்க வேண்டும்? வாழ்க்கையின் பொருள் என்ன? எப்படி…


Books

Free to Download

01

June 2024

குமார் விதிகள்

02

March 2013

ஏழாவது அறிவு

03

June 2011

உன் செயலுக்கு நீ காரணம் அல்ல

04

January 2024

என் பார்வையில் அரசியல்

05

May 2013

மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்

06

July 2014

புத்தகம் படிப்பதால் அறிவு வளராது

07

April 2013

தூக்குத் தண்டனையும், கடவுளும்

ஆய்வின் கோட்பாடுகள்

நம் சிந்தனைக்கும் செயலுக்கும் நாம் காரணம் அல்ல, தொடர்வினை தான் காரணம்.


தொடர்வினையே நம்மையும், உலகையும், பிரபஞ்சத்தையும் இயக்குவதால் விதி உண்மை.


விதி உண்மை என்பதால் விதியை மாற்றக்கூடிய சக்தி எதுக்கும், யாருக்கும் இல்லை என்பதால் கடவுள் இல்லை.


தொடர்வினை எனும் விதி நம் செயலை பார்த்துக்கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக, விதி எனும் கடவுள் நம் செயலுக்கான பலனை நிச்சயம் நமக்கு கொடுப்பார் இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. வெற்றி நம்முடைய விதியாக இருக்க வேண்டும் என்றால் வெற்றியின் முன் வினை முயற்சியாக இருக்க வேண்டும், முயற்சி இன்மையின் தொடர்வினை ஒருபோதும் வெற்றியாக இருக்காது.


நம் அனுபவத்தால் பெறுவது மட்டுமே அறிவு, அனுபவம் இல்லாமல் படிப்பு மூலம் பெறும் தகவல் அறிவாகாது.


நாம் பெரும் அறிவு நம் அனுமதி இல்லாமல் நம்மை ஆளுமை செய்யும்,நாம் எந்த அறிவைப் பெற வேண்டும் எந்த அறிவை பெறக் கூடாது என்று அறிவால் அறிவை வடிகட்டுவது தான் ஏழாவது அறிவு.


பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதன் மூலம் பெரும் அறிவே ஆறாவது அறிவு.


ஒரு மனிதன் பிறப்பால்  தான்பெற்ற உணர்வின் விருப்பப்படியே அறிவைப் பெறுகின்றான், அவனுடைய சிந்தனையும் உணர்வின் விருப்பப்படி தான் இருக்கின்றது. தன்னுடைய உணர்வுக்கு தீனி போடும் எழுத்தை தான் வாசகர்கள் படிக்கின்றார்கள்.எனவே ஒருவருடைய அறிவுக்கு அவருடைய மரபணுவே முக்கிய காரணமாக உள்ளது.

இரா.விஜயகுமாரன்