Opinion

  • பாத பூசை

    திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்வொரு பெற்றோருக்கும் பிள்ளைகள் இறைவன் போட்ட பிச்சை, தவமிருந்து பெற்ற பிள்ளைகளின் கால்களை தொட்டு வணங்கி இறைவனுக்கு நன்றி சொல்லாத பெற்றோர்களே இல்லை. நாம் பிறக்கும் போதே பய உணர்வோடு தான் பிறக்கின்றோம் அதன் காரணத்தால் நம்மை விட உயர்ந்தவர்களை பார்த்தால் நமக்கு பயம்…

  • மணப் பொருத்தம்

    திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்தைப் பற்றிய கருத்து ஒருவருக்கு ஒருவர் மாறுபட்டு தான் இருக்கும் .திருமண வாழ்க்கையில் யார் ,யாருக்கு பொருத்தமாக இருப்பார் என்று யாராலும் சொல்ல முடியாது. 30, 40 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பிறகுதான் தம்பதிகளுக்கு தெரியும் அவர்களுக்குள் பொருத்தம் இருந்ததா,இல்லையா என்று .திருமண வாழ்க்கையில் ஆணும், பெண்ணும்…

  • அடிமை உடன்படிக்கை

    வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான்,ஒரு ஆணுக்கு பெண் அடிமை கிடைப்பதும், ஒரு பெண்ணுக்கு ஆண் அடிமை கிடைப்பதும் இயற்கை கொடுத்த வரம்.அடிமை வாழ்க்கையில் உரிமைக்கு இடம் இல்லை,சொல்வதை செய்யக்கூடிய கடமை மட்டுமே உள்ளது ,எனவே இரண்டு அடிமைகளும் இல்லற வாழ்க்கையில் உரிமையை பேசாமல் அடிமையாக இருந்து கடமையை…

  • பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?

    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உன்னை விட உயர்ந்தவன், நீ என்னை விட தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு,ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சியும் உணர்வின் வெளிப்பாடு. உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் !…

  • ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2

    “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வடலூரில் நடத்தி வருகின்றார், புத்தகங்களை படிப்பதும் சமுதாய சிந்தனையும் தான் இவரின் முழு நேர பணி. அவர் அவருடைய கருத்தை பதிவு செய்து இருந்தார், இதில் அவர் எழுதி இருந்தது, தங்கள் எழுத்து அவப்பொழுது எதையோ தொட்டுவிட்டு சென்று விடுகின்றது அந்த…

  • ஆள் பாதி, ஆடை பாதி

    ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவலைப்படுவது இல்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியும் நான் கவலைப்படுவதில்லை என்றால் அது தவறு இல்லை ஆனால் அதற்கான எதிர் வினையை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். பார்த்தவுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் புரிதல், நம்பிக்கை உங்கள் ஆடையை அடிப்படையாக…

  • சீ..சீ..இந்த பழம் புளிக்கும்

    வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிருக்கும் அறிவு நமக்கு இன்பத்தை கொடுத்தால் அது நல்லறிவு,துன்பத்தைக் கொடுத்தால் அதற்கு அறிவு சூனியம் என்று பொருள். பலர் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி அறிவு சூனியத்தால் துன்பத்தில் வாழ்கின்றார்கள் எது நல்லறிவு,எது அறிவு சூனியம் என்பதை அறிந்து நல்லறிவை மட்டும்…

  • தொழிலாளிக்கு முதலாளி எதிரியா?முன்மாதிரியா?

    நமக்கு எது நன்மையோ அதுவே சரியானது என்று ஒருவரைப் போலவே இருவரும் நினைப்பதால் தான் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. நான் ஆறு ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து நெய்வேலியில் நம்பர் ஒன் மின் ஒப்பந்த நிறுவனத்தின் முதலாளியாக உயர்ந்ததால் எனக்கு தொழிலாளியின் கஷ்டங்களும் தெரியும், முதலாளியின் கஷ்டங்களும் தெரியும். எனவே இந்த கட்டுரையை நான் எழுதுவது மிகவும் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அறிவைப் பற்றி நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும்…

  • தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறை சரியா?

    தமிழக மின்துறை அமைச்சரின் பார்வைக்கு இந்த கட்டுரை சென்று அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன், எனவே அனைவரும் பகிருங்கள். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். தமிழக அரசின் மின் கணக்கீட்டு முறையில் முதல் 100 யூனிட் வரை அனைவருக்கும் இலவசம். 200 யூனிட்டுக்குல் பயன்படுத்தினால் 100 யூனிட் முதல் 200…

  • உண்மையான காதல்

    காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இதுதான் நாகரிகம். காதல் திருமணம் அதிகரிப்பது நாகரிகத்தின் வளர்ச்சி என்பது தவறான பார்வை, தவறான கருத்து, இது அநாகரிகத்தின் ஆரம்பம். உண்மைக் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, இது எதையும் பார்க்காமல்…