அறிவுரை
-
விதியை நம்பாதே! புரிந்து கொள்!
விதியின்படி தனக்கு கிடைக்க வேண்டியது அனைத்தும் தனக்கு கிடைத்துவிடும் என்று சோம்பேறி காத்திருந்தான், விதியும் அவனின் செயலுக்காக காத்திருந்தது.
-
பயம்
யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித்தவர், படிக்காதவர் என்ற ஏற்றத்தாழ்வு இன்றி என்னிடம் இல்லாத அறிவை மற்றவர்களிடமிருந்து நான் தினம் தினம் பெறுகின்றேன். அறிவும் நீரும் தாழ்வான பகுதியை நோக்கி தான் செல்லும், நம்மை அறிவாளி என்று நினைத்துக் கொண்டால் அறிவை பெற முடியாது, நம்மிடம் இல்லாத அறிவை…
-
அரசியல் 🇮🇳🇮🇳
அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…
-
மே 17 இயக்கத்திற்கு…
ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது. பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சியின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால்…
-
மதுவிலிருந்து விடுதலை…
மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும், அறிவும் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி பரிசோதித்து விட்டேன் இந்த கட்டுரையை படித்துவிட்டு கெட்ட பழக்கங்களில் இருந்து பலர் மீண்டு இருக்கின்றார்கள்,எனவே அனைவரும் இதை படித்து பயன்பெறுங்கள். நம்முடைய சிந்தனையும், செயலும் நாம் பெற்றிருக்கும் உணர்வையும், அறிவையும்…
-
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உன்னை விட உயர்ந்தவன், நீ என்னை விட தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு,ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சியும் உணர்வின் வெளிப்பாடு. உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் !…
-
சுதந்திர தினம் 2025
சாதி, மதம், மொழி, மாநிலம், ஆகியவற்றின் பிரிவினை அரசியலால், கற்காலத்துக்கு சென்றுள்ள இந்திய ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்த நிலையில், பிரிவினை அரசியலால் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்வதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதா, என்ற வேதனையில் இந்த சுதந்திரத் திருநாளை கடந்து செல்லக்கூடிய கட்டாயத்தில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த நிலை மாறி சமத்துவமும், சமாதானமும், ஜனநாயகமும்,இந்தியாவில் மலர்ந்திட வாழ்த்துக்கள். 72 ஆண்டுகளாக வடஇந்தியர்களிடம், தென்இந்தியர்களாகிய நாம் மொழியாலும்,…
-
தோல்வியும், துன்பமும் நிரந்தரம் அல்ல!
தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்விபட்டு அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன்.இந்த கட்டுரையை படித்துவிட்டு குறைந்தது ஒரு இளைஞர் தன் முடிவை மாற்றிக் கொண்டால் அந்த புண்ணியம் அவருக்கு பகிர்ந்த நபருக்கே போய் சேரும். வெற்றியும்,தோல்வியும் இரண்டு பாதைகள், வெற்றியின் பாதையில் சென்று துன்பத்தை சென்றடைந்தவர்களும் உண்டு,தோல்வியின் பாதையில் சென்று இன்பத்தை…
-
வாதம் செய்வது சரியா?
வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும்.வாதம் எங்கு செய்ய வேண்டும், வாதம் இல்லாமல் கருத்தை மட்டும் எங்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டதால் வாதத்தைபற்றி ஆய்வு செய்து அதற்கான அளவுகோலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தேன்,அதை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற…
