இந்தி_திணிப்பு
-
சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!
சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமையில் இருந்து விடுபட்டு மாநில உரிமை என்ற ஒற்றைப் புள்ளியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான அரசியல் விழிப்புணர்வு கட்டுரைதான் இது. வாழ்க்கைக்கு பொருளாதாரமே ஆதாரம், ஒன்றிய அரசுக்கு நாம் கட்டும் வரி மீண்டும் மாநில நலனுக்காக வருகின்றதா என்றால் இல்லை, வரி என்ற பெயரில் நம் பொருளாதாரத்தை சுரண்டி தான் வடக்கில் வாழ்கின்றார்கள்.கண்ணுக்குத் தெரியாமல் நம் மக்களின் உழைப்பு வடக்கர்களால் சுரண்டப்படுகின்றது, நம் வரி பணத்தை செலவு செய்துதான் இந்தியை,சமஸ்கிருதத்தை…
-
சுதந்திர தினம் 2025
சாதி, மதம், மொழி, மாநிலம், ஆகியவற்றின் பிரிவினை அரசியலால், கற்காலத்துக்கு சென்றுள்ள இந்திய ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்த நிலையில், பிரிவினை அரசியலால் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்வதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதா, என்ற வேதனையில் இந்த சுதந்திரத் திருநாளை கடந்து செல்லக்கூடிய கட்டாயத்தில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த நிலை மாறி சமத்துவமும், சமாதானமும், ஜனநாயகமும்,இந்தியாவில் மலர்ந்திட வாழ்த்துக்கள். 72 ஆண்டுகளாக வடஇந்தியர்களிடம், தென்இந்தியர்களாகிய நாம் மொழியாலும்,…
-
சுதந்திர இந்தியாவில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமா !
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்கு இணையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிஅரசருக்குமே உள்ளது. ஒன்றிய மந்திரிசபை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு இல்லை, தானாக முன்வந்து சில உத்தரவுகளையும் ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கவும் உரிமை உள்ளது, அது போல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பது மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை…
-
வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…
-
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன்…
-
நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும்
ஒரு சமுதாயத்தின் அறிவு தான் அந்த சமுதாயத்தின் நீதியாக இருக்க முடியும். நீதி மாறவேண்டுமென்றால் சமுதாய அறிவு மாறவேண்டும். பெரும்பான்மை மக்களிடம் அறிவு மாற்றமில்லாமல் நீதி மாற்றம் ஏற்படாது. ஒரு நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொள்ள மக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கும் ஆர்வம் மாநில பொருளாதாரம், கல்வி, மொழி ஆகியவற்றின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்பதில் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கடமை ஊடகங்களுக்கு தான் அதிகம் உள்ளது ஆனால் இங்கு ஊடகங்களால் அனைத்தும்…
-
மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை
மக்கள் அறிவில்லா ஆட்டுமந்தை, இவற்றில் ஒன்று இந்த மந்தையை வழிநடத்துவது தான் ஜனநாயகம். மந்தையின் தலைவன் (அரசியல்வாதி )ஆட்டு மந்தையின் விருப்பப்படி ஆட்சி செய்தால் தான் அவன் தலைவனாக இருக்க முடியும். எது நன்மை, எது தீமை என்று அறிந்து செயல்பட்டால் அவன் பதவி பறிபோய்விடும், எனவே ஜனநாயக நாட்டில் ஆள்பவன் அறிவாளியாக இருந்து பயனில்லை, மக்களின் விருப்பத்தை செயல்படுத்துபவனாக இருந்தாலே போதும். மக்களையும், அரசியல் தலைவர்களையும் நன்மை, தீமை அறிந்து வழிநடத்த அரசியல் சார்பில்லாத சமூக…
-
இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும்
நம் கல்விமுறை அறிவை கொடுப்பதற்காக மட்டும் இருந்தால் இந்தி மட்டுமல்ல அனைத்து மாநில மொழியையும் படிக்கலாம் தவறு இல்லை, ஆனால் நம் கல்விமுறை ஒருவனுடைய அறிவுத்திறனையும் மதிப்பிடுவதால் இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியர் அனைவருக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தும். நம் தாய்மொழியின் உரிமைக்காக குரல் கொடுத்திருக்கும் இசை அமைப்பாளர் யுவனை கேலி செய்யும் தமிழர்கள் தன் கையாலேயே தன் கண்ணை குத்திக்கொள்பவர்கள். தன்னுடைய குருதி என்று அறியாமல் தன் குருதியை தானே சுவைத்து அருந்தும் அரசியல் கைக்கூலி…
-
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய…
-
இந்தி மொழியை கற்கலாமா ?
மத்திய அரசின் நிர்ப்பந்தம் இல்லாமல் விருப்பமுள்ளவர்கள் இந்தி மொழியை கற்கலாமா ? அறிவை பற்றி நான் செய்த ஆய்வில் கிடைத்த விடை —நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளஆரம்பித்துவிடும் என்பதே,இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாம் பெறுகின்ற அறிவு அனைத்தும் நமக்கு நன்மையை செய்யாது. நாம் பெற்ற பல அழிவுகள் நமக்கு சூனியம்மாகவே அமைந்துவிடுகின்றன.அதனடிப்படையில் இந்தியை தாய்மொழியாக இல்லாதவர்கள் இந்தியை விரும்பி கற்றுக்கொண்டால் அது…
