அரசியல்_பிரிவினை

  • கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?

    திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது…

  • அரசியல் 🇮🇳🇮🇳

    அரசியல் பேசாமல் அரசியலைப் பற்றி பேசுவோம் வாருங்கள், அரசியல் என்றால் என்ன?அரசியலை யார் கிட்ட பேசணும்? எங்க பேசணும் ?என்பதை பற்றிய என்னுடைய கருத்தே இந்த கட்டுரை. அரசியல் என்றால் என்ன? தனக்கு எந்த கொள்கையால் நன்மையோ அதை ஆதரித்து பேசுவது தான் அரசியல், இதுதான் ஜனநாயகம் நமக்கு கொடுக்கும் உரிமை. மதம், சாதி, மொழி, பொருளாதாரம், இனமென்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தான் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்கள். சிறுபான்மை இஸ்லாமியரை…

  • மே 17 இயக்கத்திற்கு…

    ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது. ​ பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சியின்  வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால்…

  • சுதந்திர தினம் 2025

    சாதி, மதம், மொழி, மாநிலம், ஆகியவற்றின் பிரிவினை அரசியலால், கற்காலத்துக்கு சென்றுள்ள இந்திய ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்த நிலையில், பிரிவினை அரசியலால் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் சொல்வதா, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதா, என்ற வேதனையில் இந்த சுதந்திரத் திருநாளை கடந்து செல்லக்கூடிய கட்டாயத்தில் இந்திய ஜனநாயகம் உள்ளது. இந்த நிலை மாறி சமத்துவமும், சமாதானமும், ஜனநாயகமும்,இந்தியாவில் மலர்ந்திட வாழ்த்துக்கள். 72 ஆண்டுகளாக வடஇந்தியர்களிடம், தென்இந்தியர்களாகிய நாம் மொழியாலும்,…

  • அரசியல் சூழ்ச்சி

    சமூக நீதிக்கு எதிராக சாதி ஒழிய வேண்டும் என்று திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றி, சிறுபான்மை சாதியினர் மக்களை கடந்த 75 ஆண்டுகளாக ஆண்டு விட்டார்கள், செல்வங்களையும் பல ஆயிரம் கோடிக்கு சேர்த்து விட்டார்கள். மக்களிடம் சாதி உணர்வை தூண்டி பெரும்பான்மை சாதியின் தலைவர்களான ராமதாஸ், திருமாவளவன் போன்ற தலைவர்கள் பல கோடிகளை சம்பாதித்து மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமுதாயத்தில் வாழ்கின்றார்கள். ஆனால் மக்கள் சாதியைப் பற்றிய புரிதல் இல்லாமல் சாதி ஒழியனும் என்றாலும் கை தட்டுகின்றான்,…

  • சாதி புத்தி

    உன் சாதி புத்தி என்று திருமாவளவன் பேசியதும், மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் தனக்கு உரிமை வேண்டும் என்று தலித் மக்கள் கேட்பதும் சரியா என்பதை ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. சாதியைப் பற்றிய விழிப்புணர்வு முதலில் மக்களிடம் வரவேண்டும் சாதி ஒழிய வேண்டும், சாதியை ஒழிக்க வேண்டும் என்று நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தில் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி ஒழிய வேண்டும் என்பதை நியாயப்படுத்தி திராவிட கட்சிகளால் அதிக அளவில் பேசப்பட்டது, அதற்கு காரணம்…

  • மத அடையாளம்

    ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிழைப்புக்காகவே தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றான், எனவே பிழைப்புக்கு இடையூறாக இருக்கின்ற தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் அனைவரும் மறைந்து விடுகின்றோம். தன்னுடைய அடையாளம் தன்னை இந்த சமுதாயத்தில் இருந்து அன்னியப்படுத்திவிடும் என்ற அச்சத்தால் தான் பிராமணர்கள் பூணூல் தெரியாமல் ஆடையை அணிந்து கொண்டார்கள், சிகை அலங்காரத்தையும் மாற்றிக் கொண்டார்கள். இது போல் தான் நாம் அனைவரும் தன் மத அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் பொதுவெளியில் காட்டுவதை தவிக்கின்றோம். இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத அடையாளத்தை பொதுவெளியில்…

  • கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும்

    விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற புதிய அறிவை மக்கள் பெறாதவரை உலகில் பிரிவினை அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

  • உங்கள் வாக்கு எதற்கு, உணர்வுக்கா? அறிவுக்கா?

    உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும். சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது, ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது, சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது, குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம்…

  • அரசியல் கைக்கூலிகள்

    அரசியலுக்காக சாதியாலும்,மதத்தாலும் மக்களை ஒன்று திரட்டும் ஒவ்வொருவனும் சமுதாய நல்லிணக்கத்திற்கு எதிரானவன்.பிழைக்க வழி இல்லாத அரசியல் கைக்கூலிகள், தன் பிழைப்புக்காக புதியதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் அங்கு ஓடி இடம் பிடிப்பது இயல்பே.