மொழிப்_போராட்டம்

  • மே 17 இயக்கத்திற்கு…

    ஜனநாயகத்தில் சிறுபான்மையினரை எதிர்த்து பெரும்பான்மையினர் ஒன்று திரண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்,பெரும்பான்மையினரை எதிர்த்து சிறுபான்மையினர் ஒருபோதும் ஜனநாயகத்தில் வெற்றி பெற முடியாது. ​ பிஜேபி யின் வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை இஸ்லாமியரை எதிர்த்து இந்துக்களை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சியின்  வெற்றிக்கு ரகசியம் சிறுபான்மை பிராமணர்களை எதிர்த்து மற்ற சாதியினரை ஒரு அணியில் திரட்டியதுதான். திராவிட கட்சிகளின் மொழி போராட்டம் வெற்றி பெறாமல் போனதற்கு இந்தி பேசும் பெரும்பான்மையினரை தமிழ் பேசும் சிறுபான்மையினர் ஜனநாயகத்தால்…

  • எதிர்த்து அடி

    அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தால் தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருப்பார்கள், நாம் திருப்பித் தாக்கினால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹிந்தியை எதிர்ப்பது என்பது அடியை தடுப்பது போல் தான், இது போன்ற மக்களை ஏமாற்றும் அரசியலை திரு ஸ்டாலின் அவர்கள் செய்யாமல் அனைத்து மாநில மொழிகளுக்கும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழி உரிமை வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் மட்டுமே நம் மொழியை நாம் பாதுகாக்க முடியும். மொழியைப்…

  • மொழி விடுதலைக்கு புதிய உத்தி

    செப்டம்பர் 14 யை ஹிந்தி தினமாக கொண்டாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்யை தெரிவித்து அனைத்து மாநில மொழிகளையும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக அறிவித்து, அனைத்து தேசிய அலுவல் மொழி தினமாக செப்டம்பர் 14 யை கொண்டாட வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கைக்கு காரணம் மே 2013 அன்று நெய்வேலியில் ஒருவருடைய சிந்தனையில் உருவான சிறுபொரி தான் என்றால் நம்பமுடியுமா !…

  • சபதம்

    சுதந்திர தின உறுதிமொழி இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 ளின் படி அனைத்து மாநில மக்களும் சமம் என்ற பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எப்போது இந்தியை போல் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் கிடைக்கின்றதோ அப்போதுதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன் என்று சபதம் ஏற்கின்றேன்.

  • சும்மா இருந்தாலும் அதுவும் புரட்சி தான்

    ஆகஸ்ட் 15, ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் மட்டுமல்ல இதே நாளில்தான் நாம் இந்தி பேசும் வட இந்தியர்களிடம் மொழி அடிமைகளாக அடிமைப்பட்டு, மொழி அடிமைகள் என்ற புரிதல் இல்லாமல் மூன்று தலைமுறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அடிமைகள் நாம்தான். புரட்சி என்பது ஆயுதத்தை கையில் எடுப்பது அல்ல, ஒவ்வொருவர் மனதிலும் நாம் மொழி அடிமைகளாக இருக்கின்றோம் என்ற புரிதல் அரும்பினாலே போதும் அதுதான் புரட்சி. இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம்…

  • மொழியின் தேவைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாதவர்களுக்கு!

    இந்தி பேசுபவன் மட்டும்தான் இந்தியன் என்று வட இந்தியன் சொல்வதால் ! தென் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதே நாம் இந்தியன் என்பதற்கான அங்கீகாரம். நம் மொழிக்கான அங்கீகாரம் தான் நமக்கான அங்கீகாரம் என்பதால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானதிலிருந்து தொடர்ந்து மொழி உரிமைக்கு தமிழகம் போராடுகின்றது. பிற மொழிகளை நாமாக விரும்பி கற்பது தவறல்ல, கல்வித்திட்டத்தில் பிறமொழிகளை கட்டாயப்படுத்தி திணிப்பது தான் நம் உரிமைக்கு எதிரானது. இதை…

  • வேண்டும்! வேண்டும்!! மொழி சுதந்திரம் வேண்டும்!

    ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force). வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒரு வெற்றிடத்தை மையமாக வைத்து உருவாவது போல் ( tornado force). ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிடத்தை மையமாக வைத்து, தலைமை இல்லாமல் கொள்கையால் இணைந்த போராட்ட இயக்கம் அதனால் தான் புயலைப்போல் அதன் வேலை முடிந்ததும் தானாகவே வலுவிழந்து…

  • மொழி சுதந்திரப் போராட்டம்

    அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று, இந்தியைப் போல் 22 மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் ஒன்றுதிரட்டி போராடுவதால் நிச்சயம் இந்த முறை நமக்கு மொழி சுதந்திரம் கிடைத்து விடும். அரசியல் சுயநலமில்லாமல் ஒன்றிணைவோம் !போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!

  • இந்தி தெரியாது போடா…

    ”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழிச் சுதந்திரப் போராட்டமே ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் போராடுபவர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் அவர்கள் தாய் மொழிக்காக போராட தகுதி இல்லாதவர்கள் என்று கேலி செய்வது அறியாமையின் வெளிப்பாடே மற்றும் தாய்மொழி உணர்வை அரசியலுக்காக விற்கும் செயலே இது.

  • சுய விடுதலை

    தஞ்சை பெரிய கோயிலின் 2020 குடமுழுக்கு தமிழர்களின் அறியாமைக்கும், அடிமைத்தனத்துக்கும் முழுக்காக அமைய வாழ்த்துக்கள். தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராடிய, ஆதரவு கொடுத்த தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி தான் நடத்துகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, மறைத்து விடக்கூடாது. தமிழ் மொழியை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை தமிழில் செய்ய முன்வரவேண்டும். அண்ணாவின் மொழிப் புரச்சியால் 60 ஆண்டுக்கு முன்பே மக்கள் மொழி விழிப்புணர்வு பெற்று…