மூளைச்சலவை
-
தங்க கரண்டி
தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் கிடைக்கின்றது, பார்ப்பதாலும் கிடைக்கின்றது இதில் படிப்பதால் தகவலை பெறுகின்றவர்கள் தான் அறிவாளிகள் என்று அறிவைப் பற்றிய அறிவு இல்லாதவர்களை மூளை சலவை செய்து வைத்துள்ளார்கள்.கற்பனை கதைகளை இலக்கியமாக,நாவலாக படித்தாலும் நாடகமாக, திரைப்படமாக பார்த்தாலும், காதையாக கேட்டாலும், இவைகள் மூளையில் சேகரித்து வைக்கப்படும் குப்பைகள். தங்க கரண்டியால்…
-
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…
-
கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?
இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவர் தினமும் மது அருந்துவேன், புகைபிடிப்பேன் என்று பொதுவெளியில் சொல்கின்றார் அதை பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து ரசிக்கின்றார்கள்.எதை இந்த மக்கள் விரும்புகின்றார்கள்!எதை நோக்கி இந்த சமுதாயம் செல்கின்றது! உணர்வை ஆளுமை செய்ய முடியாமல் பெரும்பாலானவர்கள் மதுவில் தன்னுடைய வாழ்க்கையை தொலைக்கின்றார்கள், மீதம் உள்ளவர்கள்…
-
எச்சரிக்கை மணி
திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை…
-
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான்
புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரபலமானவர் பெயரைச் சொல்லி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதன் நோக்கம் உன்னை சிந்திக்க விடாமல் நம்ப வைப்பதற்கு என்பதை வாசகன் புரிந்துகொள்ள வேண்டும். விதி உண்மை என்று ஒரு எழுத்தாளர் சொல்ல நினைத்தால் எப்படி என்று விளக்க வேண்டுமே தவிர, மாறாக பெரிய மனிதர்களின் பெயரை…
-
ஏழாவது அறிவு
எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை… ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம்,அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் ‘ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே…
-
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது.நம் வீட்டு முன்னோர்களை நாம் ஆய்வு செய்து பேசும் போது, பக்கத்து வீட்டு முன்னோர்களைப் பற்றி நீ ஏன் பேசமறுகின்றாய் என்று கேட்பது அறிவுள்ள செயலா?.தெரிந்தே தெருச் சண்டையை உண்டாக்கும் சூழ்ச்சி அல்லவா அது.எனவே மாற்று மதக் கடவுள்களை தமிழர்கள் விமர்சிப்பதில்லை,அதனால்தான் தமிழகம் மதக் கலவரம் இல்லா நாடாக உள்ளது.வடநாட்டைப்போல்…
