தொடர்வினை_தத்துவம்
-
படிக்காதவன்
இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய மகனின் நண்பன் தான் காரணம். என்னுடைய மகன் பொறியியல் படித்த அவனுடைய நண்பனிடம் என்னுடைய வலைதளமான vijayakumaran.in கொடுத்து நான் எழுதிய புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிக்க சொல்லி இருந்தார் கொஞ்சம் மட்டும் படித்த நிலையில் என்னுடைய வீட்டிற்கு மகனை பார்க்க வந்தவரும் நானும் உரையாடியதை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னது உங்களுடைய புத்தகத்தை படிக்கும்போது சரியாக தான் இருக்கு,படித்து முடித்த பிறகு ஏற்றுக்கொள்ள முடியாதது போல்…
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள். ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு…
-
உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…
-
கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன். இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும்…
-
சுய பரிசோதனை
நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென்றடைய முடியும். அதுபோல் நம் வாழ்க்கை பயணத்தில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என்பதை முடிவு செய்வதற்கு முன் நாம் எங்கு இருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு இலக்கை முடிவு செய்தால் தான் வாழ்க்கை பயணம் இனிமையாக இருக்கும்.நாம் ஒவ்வொருவரும்…
-
கர்மா
கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று பொருள். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். கர்மா என்பது முன்ஜென்மத்தில் செய்த செயலின் பலன் அல்ல. கர்மா என்பது முன்னோர்கள் செய்த செயலின் பலன் என்று பொருள். முன் ஜென்மம், மறுபிறவி என்று எதுவும் இல்லை. மனிதனை…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
-
கதை கேளு! கதை கேளு!
போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இல்லை இறந்த காலத்தின் தொடர்போடுதான் இருக்கின்றது, இதிலிருந்து விடுபட்டு சுயமாக, சுதந்திரமாக யார் ஒருவராலும் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது “என்ற இந்த நான்கு வரிகள் புரிந்தால் தான் நான் எழுதிய “குமார்விதிகள்” என்ற புத்தகத்தின் நாற்பது பக்கங்களும் புரியும். தங்க நாணயம் தரையில் கிடப்பதை பார்த்த நான்…
