நான்_எனும்_உணர்வு

  • ஒருவரின் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது சரியா? தவறா?

    பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் ஒரு பெண்ணிடம் அவருடைய ஜாதியை கேட்டது பற்றி பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர், இதை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது, யாரும் ஆறாவது அறிவின் ஆளுமையில் செயல்படவில்லை அனைவரும் சாதி உணர்வின் ஆளுமையில் தான் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சாதியை கேட்டது சரி என்பதும், தவறு என்பதும் பகுத்தறிவின் வெளிப்பாடு, தனக்கு எது நன்மை என்று பகுத்தறிந்து செயல்படுவது தான் பகுத்தறிவு, இந்த பகுத்தறிவை ஆறாவது அறிவாக நினைத்து…

  • மதுவிலிருந்து விடுதலை…

    மது, புகையிலை, போதை, தகாத உறவு போன்ற பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும், ஆனந்தமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்த கட்டுரையை உணர்வும், அறிவும் என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பே நான் எழுதி பரிசோதித்து விட்டேன் இந்த கட்டுரையை படித்துவிட்டு கெட்ட பழக்கங்களில் இருந்து பலர் மீண்டு இருக்கின்றார்கள்,எனவே அனைவரும் இதை படித்து பயன்பெறுங்கள். நம்முடைய சிந்தனையும், செயலும் நாம் பெற்றிருக்கும் உணர்வையும், அறிவையும்…

  • துறவு

    இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். துறவு என்றால் என்ன?துறவு நமக்கு இன்பத்தை கொடுக்குமா? என்பதுதான் நம்முடைய கேள்வி. துறவு என்ற வார்த்தைக்கு “விடுதல் “மற்றும் “வாய்ப்பான நிலை” என்று பொருள். துறவு என்பதற்கு அனைத்தையும் துறக்க வேண்டும் என்று பொருள் கொள்வது தவறு. துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அடுத்த…

  • பாலம்

    ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு. நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது…

  • துளிர்

    மரத்திலிருந்து பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகள் துளிர் விடுவது போல், பழைய கருத்துக்கள் நம்மிடமிருந்து உதிர்ந்தால் தான் புதிய கருத்துக்கள் நம்மிடம் துளிர்விட முடியும். வள்ளலார் அவர்களுக்கு தான் எழுதிய ஐந்து திருமுறைகளும் தவறு என்று தோன்றியதால் தான் ஆறாவது திருமுறையை எழுதினார், ஆறாவது திருமுறை எழுதியவுடன் இதற்கு முன் எழுதிய ஐந்து திருமுறைகளையும் படிக்காதீர்கள் கொலுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டார், இதுவே வள்ளலார் அறிவு வளர்ச்சிக்கு சான்று. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இறந்த காலத்தில் இருந்து…

  • வாழ்வியல் அறிவு

    அறிவு துன்பத்துக்கு மருந்தாகவும், அறியாமை இன்பத்திற்கு வித்தாகவும் இருக்கின்றது. அறிவு வலிக்கு மருந்து, இது வலி உணர்வை போக்குவதோடு மட்டுமில்லாமல் பக்கவிளைவாக இன்ப உணர்வையும் நம்மிடமிருந்து போக்கி விடும் எனவே வாழ்வியல் அறிவை வாழ்க்கையில் அனைத்து இன்பத்தையும் அனுபவித்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொடுத்தால் மட்டுமே சிறந்தது. மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை, இந்த நான் என்ற உணர்வில் இருந்து விடுதலையை ஒருவர் அறிவின் மூலம் பெற்றுவிட்டால் அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து…

  • கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும்

    இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன். “இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு. அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும்…

  • மரணம்

    மரணம் நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. மரணத்தின் போது நான் என்ற உணர்வு மட்டுமே சாவுகின்றது. உடல் அழிவதில்லை, உடல் உருவமாற்றம்தான் அடைகின்றது.உயிர் பிரிந்தால் தான் மரணம் ஏற்படும் என்றில்லை உயிர் இருக்கும்போதே மரணத்தை உணர முடியும். நம்முடைய அறிவின் முதிர்ச்சியால் நான் நான்அல்ல என்ற ஞான நிலையை நாம் அடையும் போது தற்காலிகமாக ஒரு சில கணம் நான் என்ற உணர்வில் இருந்து முழுவதுமாக விடை பெற்று விடுவோம் இந்த நிலை மரணத்திற்குச் சமமானது.…