கடவுள்_நம்பிக்கை
-
அவனுக்கு அறிவு இருக்கா?
அவனுக்கு அறிவு இருக்கா? இவனுக்கு அறிவு இருக்கா? என்று ஒவ்வொருவரும் மற்றவர்களின் செயலைப் பார்த்து கேள்வி கேட்கிறோம் ஆனால் நமக்கு அறிவு இருக்கா நம் செயல் அறிவின் வெளிப்பாடா? உணர்வின் வெளிப்பாடா? என்று சிந்திப்பதே இல்லை. சில நாட்களுக்கு முன் காணொளி ஒன்றை பார்த்தேன் அதில் மருத்துவர்கள் சாமி சிலைக்கு Stethoscope யை வைத்து பரிசோதிப்பது போல் இருந்தது. இதற்கு பலரும் MBBS படித்த மருத்துவருக்கே அறிவில்லை என்றும்,கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே பலரும் பதிவு செய்திருந்தார்கள். (நீங்கள்…
-
படிக்காதவன்
இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய மகனின் நண்பன் தான் காரணம். என்னுடைய மகன் பொறியியல் படித்த அவனுடைய நண்பனிடம் என்னுடைய வலைதளமான vijayakumaran.in கொடுத்து நான் எழுதிய புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிக்க சொல்லி இருந்தார் கொஞ்சம் மட்டும் படித்த நிலையில் என்னுடைய வீட்டிற்கு மகனை பார்க்க வந்தவரும் நானும் உரையாடியதை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னது உங்களுடைய புத்தகத்தை படிக்கும்போது சரியாக தான் இருக்கு,படித்து முடித்த பிறகு ஏற்றுக்கொள்ள முடியாதது போல்…
-
கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கடவுளையும் நம்பாமல் நான் நாத்திகனாக தான் இருந்தேன். இறந்த காலத்தின் தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை முதல் உலக நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்கின்றது. அணுவின் அசைவு முதல் பிரபஞ்சத்தின் இயக்கம் வரை அனைத்தும் விதியின் பயனே. என்னுடைய அசைவு ஒவ்வொன்றையும்…
-
பேய் இருக்கா?!!
நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காட்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு…
-
பாலம்
ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு. நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது…
-
மக்கள் பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை
கடவுள் இல்லை என்பதை பெரியார் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு தெளிவு படுத்தாததால், மக்கள் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை. ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை மட்டுமல்ல, மக்களையும் சாதி ஏற்றத்தாழ்வில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் கடவுள் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம், அதை நான் எழுதிய” குமார் விதிகள் “என்ற புத்தகத்தால் மட்டுமே முடியும். நான் எழுதிய புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை நாத்திகர்கள் எப்போது புரிந்து கொள்கின்றார்களோ அப்போதுதான்…
-
இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம்
நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல்லாத சமுதாயத்தில் இருந்து தான் கடவுள் நம்பிக்கை முற்போக்கு சிந்தனையாக உருவாகி உள்ளது.சீனாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தான் அதிகம், எனவே கடவுள் இல்லை என்று சொல்வது முற்போக்கு சிந்தனை அல்ல. கற்கால மனிதனின் முற்போக்கான சிந்தனை தான் ஆத்திகம். தன்னுடைய வாழ்க்கை தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால்தான் மனிதன்…
-
பெரியாரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது
அறிவு இல்லாதவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்பதை பெரியாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.கடவுளை வணங்குபவன் முட்டாள்,காட்டுமிராண்டி என்று உணர்வை தூண்டும் வகையில் பெரியார் கோபப்பட்டதால் தான் கடவுள் இல்லை என்பதை மக்கள் நம்பினார்கள்,கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரத்தையும் பெரியார் மக்களிடம் கொடுத்து புரிய வைக்கவில்லை, கடவுள் இல்லை என்ற நம்பிக்கையே பகுத்தறிவு என்று சொல்லி நம்ப வைத்தார்.கடவுளின் நம்பிக்கையால் நான் பல நன்மைகளைப் பெற்று இருக்கின்றேன் என்று சொல்பவர்களுக்கு பெரியாரிடம் இருந்து…
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்!
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவுளைப் பற்றி ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதுகின்றேன். உயிர் நம்மை இயக்கினாலும் உயிரை நாம் பார்க்க முடியாது, அது போல் கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கினாலும் கடவுளை நாம் பார்க்க முடியாது. நான் ஆன்மீகவாதியாக இருந்தாலும் அறிவியல் படி கடவுளை ஆய்வு செய்வதால் பலர் என்னை நாத்திகனாகவும்…
-
பெரியார் நாத்திகர் அல்ல !
இன்றைய மத வெறுப்பு அரசியல் தொடர்ந்தால் நாடே போர்க்களமாக மாறி விடும் என்பது உறுதி. எச்சரிக்கை ! நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிவினையால் போர்க்களத்தில் தன் உயிரை விட்டவர்களின் அனாதை பிள்ளைகளின் வாரிசாக தான் இருப்போம், நம் முன்னோர்கள் குழந்தை பருவத்தில் தெரு நாயை விட அதிக கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நாம் கடந்த 75 ஆண்டுகளாக தான் ஓரளவிற்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றோம். அதை நாம் இழந்துவிடக்கூடாது. மனிதனும்…
