கடவுள்_நம்பிக்கை
-
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !
அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்களிடம் இருந்து நான் பெற்று “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். மரத்திலிருந்து விழும் பல லட்சம் விதைகளில் ஏதோ ஒரு விதை மட்டும் மரமாக வளர்ந்து பல உயிர்களுக்கு பயன்படுவது போல் என்னுடைய எழுத்தை பல…
-
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான். கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு…
-
நம்பிக்கை
நம்பிக்கை என்பது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது அல்ல.நம்பிக்கை என்பது நேர்மறை சிந்தனை.எனக்கு எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும்,நடப்பவை அனைத்தும் நல்லதுக்கே,நிச்சயம் நான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவேன் என்ற நம்பிக்கைதான் அனைவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நிலையில்லா இந்த உலகில் தன்னம்பிக்கை முதல் கடவுள் நம்பிக்கை வரை அனைத்து நம்பிக்கைகளும் பொய்யே, ஆனால் நிலையில்லா இந்த உலகில்“இந்த நிலையும் மாறும் “என்ற நம்பிக்கையே உண்மையானது. இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது.
-
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான்
கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறிவை கொடுத்து ஒருவர் நம்பிக்கையை உடைத்து விடலாம் அப்படி ஒருவர் நம்பிக்கையை உடைத்துவிட்டால் அவர் பெற்ற அறிவே அவருக்கு சூனியமாகிவிடும், எனவே யாருடைய நம்பிக்கையையும் யாரும் உடைக்க வேண்டாம் கனவிலும், கற்பனையிலும்மே மனிதன் வாழ்க்கை சுகமாக கழியட்டும் ! தன்னம்பிக்கையை போல் கடவுள் நம்பிக்கையும் தனிமனித…
-
கடவுள் நம்பிக்கை
கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது.யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை காப்பார், இந்த நிலையும் மாறும் என்ற இதுபோன்ற நம்பிக்கையே ஒருவனை துன்பத்திலிருந்து மீண்டு வாழ நம்பிக்கை கொடுக்கின்றது, இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் அறிவு கடவுள் இல்லை என்று சொன்னாலும் உணர்வு கடவுளையே நம்புகின்றது.
-
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…
கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…
-
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா?
இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்கைக்கு எதிராக பகுத்தறிவு விழிப்புணர்வு செய்தால் குற்றமாக தெரிகின்றது இன்றைய காவல்துறைக்கு. “யாமிருக்க பயமேன் “ இது வெறும் வார்த்தையல்ல மந்திரம், துன்பத்தில் இருந்து இறைவன் நம்மை காப்பார் என்று ஒருவர் நம்பினால் அதை யாரும் பாழ்பண்ணக்கூடாது. என்னை கடவுள் காப்பார் என்று நான் நம்பினால் அது…
-
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிறுவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்பதை என் அறிவு பெற்றதால், கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டதால் வளர்ந்த பிறகும் எந்த தவறையும்…
-
நம்பிக்கையும், புரிதலும்
யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு. கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே. ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை…
-
கடவுள் நம்பிக்கை
ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை கொடுத்திருக்கும்.அறிவியல்படி வாய்ப்பே இல்லை,ஆனால் அனுபவரீதியாக உண்மை.ரசிகர்களின் உற்சாகம் இரண்டாவது இடத்தில் ஒடுபவனுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது,அந்த நம்பிக்கைதான் அவனை முதலிடத்தில் வெற்றிபெற செய்துள்ளது.இது போல் நோயால் பாதிக்கப்பட்டவர் கடவுளை வணங்குவதால் அவருக்குள் நம்பிக்கை பிறக்கிறது அது அவருடைய நோயை குணப்படுத்துகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை.கடவுள் இல்லை ஆனால் கடவுளை வணங்குவது தவறு…
