கடவுள்_நம்பிக்கை

  • கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும்

    இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் நேற்றைய நிகழ்வை நான் பதிவிடுகின்றேன். “இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல் “ ஒரு வரிக்குள் ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்து வருவது தான் இந்த வரியின் சிறப்பு. அறிவியல் படி கடவுள் இல்லை என்றாலும் எந்தத்துணையும் இல்லாமல் இருட்டில் தனியாக பயணிக்கும் ஒருவனுக்கு அவன் வணங்கும்…

  • சமத்துவ புரட்சி

    தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும். பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது…

  • என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்

    என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிருவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்றாலும் கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டேன். இந்த சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும், குறைந்ததற்கு காரணம்.…

  • மனிதன் மாற மாட்டான்

    ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விரும்புவது இல்லை என்பது மனிதனின் இயல்பு. கல்வியும், வேலைவாய்ப்பும், சமத்துவமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டதால் அவன் வனங்கிய தெய்வத்தை கூட எதிர்க்க தயங்க வில்லை என்பதுதான் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.…

  • பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?

    பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ?கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா?சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுளின் படத்தை செருப்பால் அடித்து சிறுமை படுத்தினால் அது மத நம்பிக்கைக்கு எதிரான குற்றம். இதை பெரியாரும், திராவிடர் கழகத் தொண்டர்களும் 50 ஆண்டுகளுக்கு முன் செய்தார்களா என்றால்,…

  • தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்

    உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…

  • தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல

    தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க முடியும். ஆன்மீகத்தால் மட்டுமே நீதியையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மத நல்லிணக்கத்தையும்,உலகில் ஏற்படுத்த முடியும்.

  • நின்னை சரணடைந்தேன்…

    பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…

  • மன்னிப்பு

    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…

  • அவநம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்து விடுகின்றது. கடவுள் இல்லை என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்பாததில் எந்தத் தவறும் இல்லை. அதுபோல் கடவுள் இருக்கு என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்புவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கு என்று நம்புவார்களில் பெரும்பாலானவர்கள் தான் வணங்கும் எந்த கடவுளையும் அவர்கள்…