உச்ச_நீதிமன்றம்
-
உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின்றோம் என்பதையும் அறிவியல் ஆதாரத்தோடு நிரூபித்து ஆய்வு கட்டுரைகளை 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி விட்டேன். இருப்பினும் புதிய நீதி உருவாகவில்லை. இந்த அறிவியல் உண்மையை ஆதாரமாக வைத்து உச்சநீதிமன்றம் புதிய நீதியை உருவாக்க வேண்டும்.மாறாக ஒருவன் செயலுக்கு அவன்தான் காரணம் என்ற பழைய நம்பிக்கையிலேயே நீதித்துறை செயல்பட்டால்…
-
சுதந்திர இந்தியாவில் இந்திய குடிமக்கள் அனைவரும் சமமா !
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்ற பாதுகாப்பைக் கொடுக்கின்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கூடிய பொறுப்பு குடியரசுத் தலைவருக்கும் அவருக்கு இணையாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிஅரசருக்குமே உள்ளது. ஒன்றிய மந்திரிசபை அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடும் அதிகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு இல்லை, தானாக முன்வந்து சில உத்தரவுகளையும் ஒன்றிய அரசுக்கு பிறப்பிக்கவும் உரிமை உள்ளது, அது போல் வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிப்பது மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை…
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுவோரின் நோக்கம். சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதுதான். தர்மம் என்ற வார்த்தையின் பொருள் நீதி. சனாதன தர்மம் என்பது ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்கும் நீதி என்று பொருள். வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் பொழுது…
-
தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது
தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை!என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேர்மையான அரசியல் தலைவர் ஒருவர் கூட இல்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என்னுடைய வாக்கு என் உரிமை, இதை பணத்துக்காகவோ, மதத்துக்காகவோ, சாதிக்காகவோ, சுயநலத்துக்காகவோ, அல்லது நாட்டு நலனுக்காகவோ, எதற்காக வேண்டுமானாலும் என் உரிமையை பயன்படுத்தலாம், இதில் அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிடுவது ஜனநாயகம் அல்ல. தேர்தல் ஆணையத்தின் பணி, வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது அல்ல, அவர்களின் உரிமையை…
-
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான். கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை. என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு…
-
என் வாக்கு… என் உரிமை…
தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை!என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேர்மையான அரசியல் தலைவர் ஒருவர் கூட இல்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என்னுடைய வாக்கு என் உரிமை, இதை பணத்துக்காகவோ, மதத்துக்காகவோ, சாதிக்காகவோ, சுயநலத்துக்காகவோ, அல்லது நாட்டு நலனுக்காகவோ, எதற்காக வேண்டுமானாலும் என் உரிமையை பயன்படுத்தலாம், இதில் அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிடுவது ஜனநாயகம் அல்ல. தேர்தல் ஆணையத்தின் பணி, வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது அல்ல, அவர்களின் உரிமையை…
-
ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி குறைத்தால் அது அரசியல் நகர்வாக தான் இருக்கும். அதுவே என்னுடைய இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து தண்டனையை குறைத்தால் அது அறிவியல் பூர்வமான, அறிவு பூர்வமான, உலகுக்கே முன்னுதாரணமாக இருக்கும்.] நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம்…
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது. திமுக வின்…
-
மும்மொழி கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?
1) மும்மொழி கல்விக் கொள்கை மாநில மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் இருக்கவேண்டும். இருமொழிக்கொள்கை மாநில உரிமை, இதை மீறுவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.மொழிக் கொள்கைக்கு உட்பட்டுதான் கல்வி கொள்கை இருக்க வேண்டும், மீறினால் உச்ச நீதிமன்றம், அல்லது ஐ நா தலையிடுவதற்கும், மத்திய அரசை எச்சரிப்பதற்கும் உரிமை உள்ளது. எனவே மும்மொழி கல்விக் கொள்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. 2). உலக ஆய்வின் முடிவு தாய்மொழியால் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அறிவிலும், சிந்தனைத் திறனிலும் சிறந்து…
