மறுப்புக்_கட்டுரை
-
கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?
திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நிகழ்வுகளின் தொடர்பு இல்லாமல் எந்த மதத்தையும், சாதியையும் சாராமல், பெற்றோர்களே இல்லாமல், பெற்றோர்கள் இல்லாததால் தாய்மொழியே இல்லாத ஒரு புது மனிதனாக இந்த தமிழ்நாட்டில் 27/4/26 அன்று முதல் பார்த்திபன் என்ற நபர் இந்த விலாசத்தில் வாழ்கின்றார் என்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் சான்று அளித்துள்ளார் இதை பார்க்கும் போது…
-
தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு சரியா?
நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நம் ஜனநாயக உரிமையை பறிப்பது இட ஒதுக்கீடு, தேர்தலில் இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தேர்தலில் போட்டியிடவும் வாக்களிக்கவும் சம உரிமை இருக்கும்போது 33 சதவீத இட ஒதுக்கீடு எதற்கு? ஆண்களுக்கு நிகராக பெண் வாக்காளர்களும் இருப்பதால் பெண்களின் உரிமையை ஆண் எப்படி பறிக்க முடியும்? பெண்கள் பெண்களை தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு எந்த தடையும் இல்லாத நிலையில் ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…
-
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்கு ஏற்ப இந்த தலைப்பை நான் ஆய்வு செய்வதற்கு முன்னால் காவல்துறை அதிகாரி ரவி IPS அவர்களின் காணொளியை நான் பார்த்ததே காரணம். நான் பார்த்த காணொளியில் வடகொரிய மக்கள் தேசப்பற்று மிக்கவர்களாக இருப்பதற்கு காரணம் ஆட்சியாளர்கள் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளார்கள் என்று ரவி IPS…
-
விட்டில் பூச்சி
கரூர் சம்பவம் ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரும் தலை குனிவாக உள்ளது, வடநாட்டில் ஆன்மிகம் என்ற பெயரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த சம்பவங்களை கேலி செய்த நாம் இன்று நம் மாநிலத்தில் அதைவிட கேவலமாக ஒரு நடிகனை பார்க்கச் சென்று விட்டில் பூச்சை போல் 39க்கும் மேல் உயிரை இழந்து இருக்கின்றார்கள் என்றால் நாம் எந்த அளவுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருக்கின்றோம் என்பதற்கு இது ஒன்றே போதும். இரண்டு நாட்களுக்கு முன்…
-
பேய் இருக்கா?!!
நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்றார், நான் சொன்னேன் ஆமாம் சிலருக்கு மட்டும்தான் தெரியும் ஏன் தெரியுமா! நம் கண் ஒரு காட்சியை பார்த்து மூளைக்கு செய்தியை அனுப்புவதால் தான் நாம் பார்க்கும் பொருள் நமக்கு தெரிகின்றது. இரவு…
-
வைரமுத்து பேசியது சரியா?
இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…
-
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் மசோதாவே மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதாக உள்ளது.தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது, வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கையை வைப்பதற்கு சமமானது. “முதல் கோணல் முற்றும் கோணல்“ என்பதை போல் ஆரம்பமே சரியில்லை, இன்னும் எத்தனை ஜனநாயக படுகொலைகளை இந்த புதிய கட்டிடத்தில் செய்ய இருக்கின்றார்களோ !
-
சனாதன தர்மம்
சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுவோரின் நோக்கம். சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதுதான். தர்மம் என்ற வார்த்தையின் பொருள் நீதி. சனாதன தர்மம் என்பது ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்கும் நீதி என்று பொருள். வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் பொழுது…
