இளையராஜா

  • வைரமுத்து பேசியது சரியா?

    இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…

  • இசையும், பாடலும்

    திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.வைரமுத்து அவர்களை ஒழுக்கம்…

  • உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா

    உனக்கு அறிவு இருக்கா?-இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது, இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள். “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை, அறிவைப் பற்றி ஆய்வு செய்து…

  • இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா?

    #இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலில் தவறு இருக்கா என்பதை இந்த ஆய்வில் பார்ப்போம். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி நம்முடைய ஐந்து புலன்களால் மட்டுமே அறிவை பெற முடியும். நாம் ஒரு பொருளை நுட்பமாக பார்க்கும் பொழுது நம்முடைய பார்வையின் பரப்பளவு குறைந்துவிடும், நாம் விரிந்து பார்க்கும் பொழுது நுட்பம் குறைந்துவிடும்…

  • இளையராஜா, ஆஸ்கார்

    இளையராஜா அவர்கள் ஆஸ்கார் விருது வாங்காதது இளையராஜா இயலாமையா ? அல்லது இளையராஜாவிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்று வருந்துவது ரசிகர்களின் அறியாமையா? யார் சிறந்த தாய் என்பதை பெற்ற பிள்ளைகள் சொல்வது தான் சரியாக இருக்குமே தவிர வேறொரு தாயின் பிள்ளை சொல்வது சரியாக இருக்காது. இசையை அமைப்பது அறிவு சார்ந்ததாக இருந்தாலும் இசை உணர்வை அடிப்படையாகக் கொண்டது, இந்த மக்களின் உணர்வை எந்த இசை தூண்டுகின்றதோ அதுவே சிறந்த இசை. நம் மொழி தெரியாத,…

  • மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ?

    இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ? தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக டாக்டர் அம்பேத்கர் இருப்பதால் நான் அவரை மதிக்கின்றேன். தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற வேண்டும் என்பதற்காக, மோடி யை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்திற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இடமே முன்னுரை வாங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி இளையராஜாவிடம் பிஜேபி ஆதரவைப் பெற்று இருப்பது என்பது முழுக்க அரசியல். அம்பேத்கருடன் மோடியை…