இலக்கிய_விமர்சனம்
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…
அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்பது போல்.விதி என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும் நம்முடைய முயற்சியும், உழைப்பும் தான் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.இதை புரிந்து கொள்ளாமல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவரும் சமம் என்று தனிமனித உரிமைகளுக்குள் அத்து மீறி ஒருவர் சென்றாலோ, அல்லது விதி என்பது இயற்கையின் நீதி…
-
முன்பிறவி கர்மா உண்மையா?
”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள். ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக…
-
வைரமுத்து பேசியது சரியா?
இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா? அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய…
-
இசையும், பாடலும்
திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.வைரமுத்து அவர்களை ஒழுக்கம்…
-
எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
எது சிறந்த எழுத்து ?யார் சிறந்த வாசகர் ?எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது என்பதை பார்க்காமல் எழுத்தின் ஜீவனைப் புரிந்து கொள்கிறானோ அவன் தான் சிறந்த வாசகன். யார் எழுதியது என்பதை தெரிந்து கொண்டு, எழுதியவரை நம்பி கருத்தை புரிந்தது போல் நம்புபவன் சராசரி வாசகன். புத்தர், விவேகானந்தர், காந்தி,…
-
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்…
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய்வு செய்தபிறகு ஏற்றுக்கொள் என்று பொருள். அறிவு என்ற வார்த்தையின் இடையில் வல்லினம் ‘றி ‘யா இடையினம் ‘ரி’ யா என்று எழுதுவதற்கு தமிழ்ப்புலமை தேவை, அறிவைப் பற்றி எழுதுவதற்கு வாழ்வியல் அறிவு வேண்டும் தமிழ்ப்புலமை தேவையில்லை. தமிழ்ப் புலமை பெற்றவர்கள்…
-
அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை
கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்டுக்கு ஒளி அழகு, நாவலுக்கு கதை அழகு, மதத்துக்கு கோட்பாடு அழகு, கட்சிக்கு கொள்கை அழகு, தமிழுக்கு குரல் அழகு, ஆணுக்கு பண்பு அழகு, பெண்ணுக்கு அன்பு அழகு, ஆய்வுக்கு பொருள் அழகு. இது போன்ற அலங்கார எழுத்துக்கள்,…
-
புரியவைப்பதை போல் நம்பவைப்பது
கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, ” பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்” என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவர்கள் புரிந்து கொண்டது போன்ற மாயையில் உவமையால் நம்பவைக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆம் அதே பாடலை ” பொருத்தால் நீரும் ஆவியாகிவிடும் என்று மாற்றி எழுதி இருந்தால்! நாம் பொருமையாக இருந்தால் கையில் கிடைத்ததும் கை நழுவி போய்விடும் என்பதை புரிந்ததுப்போல் நினைப்பார்கள். இது இரண்டுமே…
-
மண்பானை
ஒருவன் மண்பானையிடம் கேட்டான். “இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?” மண் பானை சொன்னது, ” என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத்தையும் முடிவையும் உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்? என்னைப் போலத்தான் இருப்பான்.” மண்பானை எப்படி தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தாமல் இது போன்ற பயனற்ற எழுத்துகளைப்போல் பல எழுத்தாளர்கள் கதைளை எழுதி நம் மக்களை முட்டாள்களாகிவிட்டாகள் இவர்களை எப்படி மீட்டு எடுப்பது?
