அவனுக்கு அறிவு இருக்கா?


அவனுக்கு அறிவு இருக்கா? இவனுக்கு அறிவு இருக்கா? என்று ஒவ்வொருவரும் மற்றவர்களின் செயலைப் பார்த்து கேள்வி கேட்கிறோம் ஆனால் நமக்கு அறிவு இருக்கா நம் செயல் அறிவின் வெளிப்பாடா? உணர்வின் வெளிப்பாடா? என்று சிந்திப்பதே இல்லை. சில நாட்களுக்கு முன் காணொளி ஒன்றை பார்த்தேன் அதில் மருத்துவர்கள் சாமி சிலைக்கு Stethoscope யை வைத்து பரிசோதிப்பது போல் இருந்தது. இதற்கு பலரும் MBBS படித்த மருத்துவருக்கே அறிவில்லை என்றும்,கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே பலரும் பதிவு செய்திருந்தார்கள். (நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று முடிவுசெய்துவிட்டு மேற்கொண்டு படியுங்கள் அப்போதுதான் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளமாட்டீர்கள்)

ஆனால் எனக்கு இந்த செயல் அறிவற்ற செயலாக தெரியவில்லை உணர்வின் வெளிப்பாடாக தான் தெரிந்தது, காரணம் நாமும் தான் சாமி படத்திற்கு முன் விதவிதமான உணவு வகைகளை வைத்து சாமி சாப்பிடும் என்று எண்ணி உப்பு இருக்கா என்று கூட பார்க்காமல் தூய்மையாக உணவை சமைத்து சாமிக்கு படைக்கின்றோம், இதற்கு பெயர் என்ன? இதற்கு ஒரு படி மேலே சென்று சில கோயில்களில் ஆடு, கோழி வெட்டி சாமிக்கு படைக்கின்றோம் இவைகளை போல் தான் பல பழக்கங்கள் நமக்கு பழகி விட்டதால் நாம் செய்வது அனைத்தும் அறிவுப்பூர்வமான செயலாகவே நமக்கு தெரிகின்றது.

நாத்திகர்கள் கடவுள் இல்லை என்று சொல்வது அறிவின் வெளிப்பாடு அல்ல, உணர்வின் வெளிப்பாடு.உயர்ந்த சாதியினர் நாத்திகர்களாக இருக்க மாட்டார்கள், தாழ்ந்த சாதியினரும், பிற்படுத்தப்பட்டவர்களும் தான் நாத்திகர்களாக இருப்பார்கள். நாத்திகம் பகுத்தறிவின் வெளிப்பாடு என்றால் உயர்ந்த சாதியினருக்கு ஏன் பகுத்தறிவு இல்லையா? சிந்திக்க வேண்டும். அறிவு அனைவருக்கும் பொதுவானது எனவே நாத்திகம் பகுத்தறிவின் வெளிப்பாடு அல்ல உணர்வின் வெளிப்பாடு நமக்கு எது நன்மையோ அதையே சரி என்று சொன்னால் அது உணர்வின் வெளிப்பாடு.

பெரியாரின் கடவுள் மறுப்பு அறிவின் வெளிப்பாடு அல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை புரட்சிக்கு கடவுள் மறுப்பு ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது எனவே பெரியாரை புரட்சியாளராக தான் நான் பார்க்கின்றேன்.

பெரியாரை பகுத்தறிவு தந்தை,அறிவு ஆசான் என்று சொல்வது உணர்வின் வெளிப்பாடு. பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வை தூண்டி புரட்சியை ஏற்படுத்தினாரே தவிர ஆறாவது அறிவை அவர் யாருக்கும் கொடுக்கவில்லை, பெரியார் விசுவாசிகள் என் மீது கோபப்படாதீர்கள் உண்மையை தான் நான் எழுதி இருக்கின்றேன். நம்முடைய அறிவின் பெரும் பகுதியை உணர்வின் விருப்பப்படியே பெறுவதால் நம் அறிவுக்கும், உணர்வுக்கும், காரணம் பிறப்பின் மூலம் நம் பெற்றோர்களே,எனவே நம் அறிவின் தந்தை நம் முன்னோர்கள் தான் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆத்திகம் சரியா? நாத்திகம் சரியா? என்றால் இரண்டும் உணர்வின் வெளிப்பாடு என்பதால் உணர்வால் இரண்டும் சரி, ஆனால் ஆய்வின்படி என்னுடைய அறிவு எனக்கு சொல்வது இரண்டும் தவறு.

நமக்குள் எப்படி சிந்தனை வருகின்றது, நாம் எப்படி சிந்திக்கின்றோம், எப்படி செயல்படுகின்றோம், அறிவு என்றால் என்ன, அறிவு நமக்குள் எப்படி வருகின்றது, ஆறாவது அறிவு என்றால் என்ன, இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது என்பதை நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு அறிவியல் பூர்வமாக நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை படித்துவிட்டு இந்த மக்களை பாருங்கள் அவர்கள் மீது உங்களுக்கு இருந்த கருத்து மாறிவிடும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இராமாயணம், மகாபாரதம் போன்ற கற்பனை கதைகளை படித்து நினைவில் வைத்துக் கொண்டதையே மூலதனமாக வைத்து சம்பாதித்து பல ஆயிரம் பேர் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்று அந்த இடம் வெற்றிடமாக உள்ளது, இன்று அனைவருக்கும் அறிவியல் அறிவு கிடைத்துவிட்டதால், அறிவியல் பூர்வமாக
இயற்கையால் நாம் எப்படி இயக்கப்படுகின்றோம் என்று கற்பித்தால், கற்பித்தல் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும்.

“குமார் விதிகள்” என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று உங்கள் உணர்வுக்கு தெரியப்படுத்திவிட்டு படியுங்கள் நான் எழுதியது மிக எளிதாக உங்களுடைய அறிவாக மாறிவிடும்.

Category: