நிர்வாகமும்_ஊழலும்

  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சியில் உள்ள ரெயின்போ நகரில் தார் சாலை அமைப்பதை பார்த்த அனுபவத்தில் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். ரெயின்போ நகர் 27 ஆண்டுகள் பழமையான நகர், இந்த நகர் மக்கள் “இலவு காத்த கிளி போல்” இவர் தலைவராகி விட்டால் சாலை போட்டுக் கொடுப்பார், அவர் எம்எல்ஏவாக ஆகிவிட்டால் சாலை அமைத்துக் கொடுப்பார்,என்று நம்பி ஏமார்ந்தது தான் மிச்சம். கடைசியில் திரு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ அவர்களின் முயற்சியில் 19 லட்சம் மதிப்பீட்டில் ரெயின்போ நகருக்கு…

  • கரூரில் 40 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கு யார் காரணம்?

    கரூரில் ஒரு திரைப்பட நடிகனை பார்க்க சென்றவர்கள் கூட்ட நெரிசலில் இறந்ததற்கு யார் காரணம்?எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியே காரணம் என்றும், ஆளும்கட்சி கூட்டத்தை கூட்டியவர்களே காரணம் என்றும், சிலர் காவல் துறையே காரணம் என்றும் சொல்கின்றார்கள்,இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் லாபத்துக்காக சொல்லும் கருத்துக்களே. நான் இந்த நிகழ்வை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல் இதை விபத்தாகவே பார்க்கின்றேன், இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதிஇருகின்றேன். கடவுளாக இருந்தாலும் எளிதாக…

  • தர்மம் தலைகாக்கும்

    நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவை வழங்க புதியதாக அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உணவகத்தை ஆரம்பித்தார்கள் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்,அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன். என்னுடைய ஆய்வின்படி…

  • குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை…

    குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை, மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் சொல்ல துணிவு இல்லை, அப்படி சொன்னால் ஒரு உறுப்பினர் கூட கட்சியில் இருக்க மாட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடு இல்லாமல் மதுவை கொடுத்து தான் மக்களை சேர்க்கின்றார்கள், ஆனால் மது ஒழிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மட்டும் போராடுகின்றார்கள்.…

  • NLC யே வெளியேறு !

    NLC ஏன் வெளியேற வேண்டும் ?1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது, வரும்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை! 2). NLC நிறுவனம் தூவங்குவதற்கு முன் பத்து அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 400 அடியாக அதிகரித்துவிட்டது இதனால் NLC ஐ சுற்றி உள்ள பகுதியில் விவசாயம்…

  • வேகத்தடை

    சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை வாகனங்களுக்கான வேகத்தடை மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடை செய்யும் வேகத்தடை. இது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் தடை. வாகனங்களுக்காக நம் நாடு இறக்குமதி செய்யும் எரிபொருளில் 20 சதவிகிதம் வேகத்தடையாலேயே அழிக்கப்படுகின்றது, இதை நம்பமுடியவில்லை என்றாலும் இது அறிவியல் பூர்வமான உண்மை. ஒரு வாகனம் வேகத்தடைக்காக break ஐ பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகத்தையும், எடையையும் பொறுத்து Momentum loss ஆகின்றது இந்த Moment…

  • புதிய பெரியாரியம்

    பெரியார் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல !கடவுளின் பெயரால் மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே கடவுளை பெரியார் எதிர்த்தார் என்று கூறும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள்,பெரியார் சாதியை எதிர்க்கவில்லை, ”சாதியால்“ உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே சாதியை எதிர்த்தார் என்று புதிய பெரியாரியம் பேசும் காலம் நெருங்கிவிட்டது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அரசு பதவிகளில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே இருந்ததால், சாதியவடிவில் இருந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக சாமானியமக்களுக்காக பெரியார்…

  • நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே !

    பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு குற்றம் செய்தவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டால், இந்த அனுபவம் குற்றம் செய்தவருக்கு மீண்டும் குற்றம் செய்ய வேண்டும் என்ற அறிவையும்,பாதிக்கப்பட்டவருக்கு காவல்துறையை நம்புவது தவறு, குற்றம் செய்தவனுக்கு நாமே தண்டனை கொடுப்பது தான் சரி என்ற அறிவையும் கொடுக்கும். அரசு ஊழியர்களை போல் இல்லாமல் சமுதாயத்தில் நீதியை…

  • இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது

    இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மையை பார்த்த பிறகாவது இனி மக்களை ஏமாற்றாமல் அரசியல் தலைவர்கள் நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும்.