Social
-
ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!
மக்களின் மனநிலை மாறாமல் ஆட்சி மாற்றத்தால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது, பயிர் கடனாக இருந்தாலும் சரி,கல்வி கடனாக இருந்தாலும் சரி, கடன் என்றால் திருப்பி கொடுப்பதுதான் நீதி. மக்களின் வரிப்பணம் தனி மனிதன் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்ய அரசு செலவு செய்கின்றது என்றால் அது வரிகட்டும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். 30 சதவிகித விவசாயிகள் மட்டுமே பயிர் கடன் வாங்கி இருப்பார்கள்,அனைத்து விவசாயிகளும் பயிர் கடன் வாங்குவது இல்லை. நானும் விவசாயி…
-
காதல்
காதலில் பலவகை உண்டு, உயிரில்லா பொருள் மீது கூட காதல் கொள்ளலாம், மொழி மீது கூட காதல் கொள்ளலாம் அனைத்தும் காதல் தான். இந்த கட்டுரையில் நான் ஆய்வு செய்து எழுதி இருக்கும் காதல், திருமணத்திற்கு முன் ஆணும், பெண்ணும் காதலிப்பது சரியா? தவறா? என்பதை பற்றியதுதான்.என்னுடைய வாழ்க்கை அனுபவத்தையும், என்னை சுற்றி நடந்த நிகழ்வுகளின் மூலம் நான் பெற்ற அனுபவத்தையும் அடிப்படையாக வைத்து நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு, தன்னிலை மறந்து விருப்பு, வெறுப்பு…
-
மே 1
ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின் தினம் தான்! உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை! உழைப்பவர்கள் தான் வாழ்கின்றார்கள்! உழைக்காதவர்கள் சோம்பல் நோயிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்! உழைக்காத சமுதாயத்தில் உழைப்புதான் மிகப்பெரிய சொத்தாக இருக்கின்றது! உழைப்பை நேசிப்போம்! உழைப்பாளர்களை நேசிப்போம்!
-
ஒருவரின் சாதியை கேட்டு தெரிந்து கொள்வது சரியா? தவறா?
பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்கள் ஒரு பெண்ணிடம் அவருடைய ஜாதியை கேட்டது பற்றி பலரும் பல கருத்துக்களை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர், இதை பார்க்கும் போது வேதனையாக இருக்கின்றது, யாரும் ஆறாவது அறிவின் ஆளுமையில் செயல்படவில்லை அனைவரும் சாதி உணர்வின் ஆளுமையில் தான் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள். சாதியை கேட்டது சரி என்பதும், தவறு என்பதும் பகுத்தறிவின் வெளிப்பாடு, தனக்கு எது நன்மை என்று பகுத்தறிந்து செயல்படுவது தான் பகுத்தறிவு, இந்த பகுத்தறிவை ஆறாவது அறிவாக நினைத்து…
-
கரூரில் 40 க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கு யார் காரணம்?
கரூரில் ஒரு திரைப்பட நடிகனை பார்க்க சென்றவர்கள் கூட்ட நெரிசலில் இறந்ததற்கு யார் காரணம்?எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியே காரணம் என்றும், ஆளும்கட்சி கூட்டத்தை கூட்டியவர்களே காரணம் என்றும், சிலர் காவல் துறையே காரணம் என்றும் சொல்கின்றார்கள்,இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் லாபத்துக்காக சொல்லும் கருத்துக்களே. நான் இந்த நிகழ்வை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல் இதை விபத்தாகவே பார்க்கின்றேன், இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதிஇருகின்றேன். கடவுளாக இருந்தாலும் எளிதாக…
-
தர்மம் தலைகாக்கும்
நேற்று( 4/8/2025) என் எல் சி ஆர்ச் அருகில் உள்ள அர்ச்சனா ஹோட்டல் உரிமையாளர் ராஜ் மற்றும் ரமேஷ் இருவரும் அவர்களுடைய அப்பாவின் நினைவு நாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவும் வகையில் வருடம் 365 நாட்களும் பத்து ரூபாய்க்கு காலை மற்றும் மதிய உணவை வழங்க புதியதாக அவர்களின் வீட்டுக்கு அருகிலேயே உணவகத்தை ஆரம்பித்தார்கள் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்று அவர்களை வாழ்த்தி விட்டு வந்தேன்,அதன் பாதிப்பில் இந்த கட்டுரையை நான் எழுதுகின்றேன். என்னுடைய ஆய்வின்படி…
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு யார் காரணம்?
ஆட்சியாளர்களா, காவல்துறையா, கல்லூரி நிர்வாகமா, அல்லது குற்றம் செய்தவனா. யார் காரணம் ?அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியையும், காவல்துறையையும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல. இந்த சமுதாயம் ஒழுக்ககேடான சமுதாயமாக மாறி உள்ள இந்த சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை யாராலும் தடுக்க முடியாது. தன்னைத்தானே பகுத்தறிவாளி என்றும் முற்போக்குவாதி என்றும் சொல்லிக் கொள்ளும் மூடர்களால் தான் இந்த சமுதாயம் ஒழுக்கக்கேடான சமுதாயமாக மாறிவிட்டது. இதற்கு பல சான்றுகள் இருந்தாலும் நான்கு நாட்களுக்கு…
-
சாதி நல்லிணக்க கட்டுரை
நம்முடைய உரிமையை போராடி பெற முடியும், ஆனால் ஒருவருடைய அன்பையும், நம்பிக்கையையும் போராட்டத்தால் பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மனித குல ஒற்றுமைக்கு நம்பிக்கையும், அன்புமே முதன்மையானது. என்னை நம்பி தான் ஆக வேண்டும் என்று கெஞ்சுவதாலோ அல்லது மிரட்டுவதாலோ யாரும் யாரையும் நம்ப மாட்டார்கள், நம்பிக்கை என்பது ஒருவர் மீது தானாக வரவேண்டும். நாம் ஒருவரை நம்ப வேண்டும் என்று நினைத்தாலும் அவருடைய இறந்த கால செயல்கள் நமக்கு நம்பிக்கை கொடுக்காவிட்டால்…
-
NLC யே வெளியேறு !
NLC ஏன் வெளியேற வேண்டும் ?1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது, வரும்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை! 2). NLC நிறுவனம் தூவங்குவதற்கு முன் பத்து அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 400 அடியாக அதிகரித்துவிட்டது இதனால் NLC ஐ சுற்றி உள்ள பகுதியில் விவசாயம்…
-
வேகத்தடை
சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை வாகனங்களுக்கான வேகத்தடை மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடை செய்யும் வேகத்தடை. இது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் தடை. வாகனங்களுக்காக நம் நாடு இறக்குமதி செய்யும் எரிபொருளில் 20 சதவிகிதம் வேகத்தடையாலேயே அழிக்கப்படுகின்றது, இதை நம்பமுடியவில்லை என்றாலும் இது அறிவியல் பூர்வமான உண்மை. ஒரு வாகனம் வேகத்தடைக்காக break ஐ பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகத்தையும், எடையையும் பொறுத்து Momentum loss ஆகின்றது இந்த Moment…
