Social

  • சாதியும், மதமும் இயற்கையின் நீதி

    சாதியும், மதமும் சூரியன், பூமி, சந்திரன் போன்று இயற்கையாகவே உருவான கூட்டமைப்புகள். சாதி மதம், என்ற கூட்டமைப்பை ஒன்றிணைத்தால் வேறு ஒரு பெயரில் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் என்பது இயற்கையின் நீதி.இதைப் புரிந்து கொண்டால் சாதி என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பது தெரியவரும். நாம் சாதி என்ற பெயரில் பல கூட்டமைப்பாக இருப்பது தவறில்லை ஆனால் அனைத்து கூட்டமைப்புக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும் அதற்காக தான் இட ஒதுக்கீடு சமுதாய நீதியாக பார்க்கப்படுகின்றது.…

  • நேர்மையைப் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை

    நேர்மையில் உண்மை இருக்கவேண்டும், உண்மையில்லா நேர்மை, நேர்மை அல்ல. தர்மத்தில் இரக்கம் இருக்கம் வேண்டும், சுயநலத்துக்காக இரக்கமில்லா தர்மம், தர்மம் அல்ல. விளம்பரத்துக்காக அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தர்மம் செய்வது தர்மம் அல்ல. வலது கை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் தர்மம் இருந்தால்தான் அது தர்மம். ஒருவருடைய நேர்மை அவருடைய இயல்பாக இருந்தால் அது உண்மையான நேர்மை. தன்னுடைய நேர்மைக்கு பலனை (புகழை, பதவியை ) எதிர்பார்க்கின்றவர்கள் உண்மையான நேர்மையானவர்கள் அல்ல. பல ஐஏஎஸ்,…

  • சுய விடுதலை

    தஞ்சை பெரிய கோயிலின் 2020 குடமுழுக்கு தமிழர்களின் அறியாமைக்கும், அடிமைத்தனத்துக்கும் முழுக்காக அமைய வாழ்த்துக்கள். தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராடிய, ஆதரவு கொடுத்த தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி தான் நடத்துகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, மறைத்து விடக்கூடாது. தமிழ் மொழியை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை தமிழில் செய்ய முன்வரவேண்டும். அண்ணாவின் மொழிப் புரச்சியால் 60 ஆண்டுக்கு முன்பே மக்கள் மொழி விழிப்புணர்வு பெற்று…

  • இடஒதுக்கீடு உரிமையா? அல்லது கருணையா?

    இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள். என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக…

  • சாதி ஒதுக்கீட்டுக்குல் பொருளாதார ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்

    தொழில் சார்ந்து சாதி உருவாகியது, பொருளாதாரத்தை சார்ந்து உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி, என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியது.பொருள் படைத்தவன் ஏழையை அடிமைப்படுத்தினான் இதை தான் சாதிக் கொடுமை என்று எண்ணுகின்றோம் பொருள் இல்லாததால் தான் அவன் கொடுமைப் படுத்தப்பட்டான் என்பதை புரிந்து கொண்டால் சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து சாதியினரும் அனைத்து தொழிலையும் செய்யலாம் என்பதும், கல்வி, வேலைவாய்ப்பில், சாதி ஒதுக்கீடு என்பதும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் ஏழைகள் வறுமையின் கொடுமையில் இருந்து விடுபடுவார்கள் என்ற அரசின்…

  • சாதி ஒற்றுமைக்கான விழிப்புணர்வு கட்டுரை

    இந்த கட்டுரையை சாதி விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் சமுதாயத்தில் சாதி ஒற்றுமை உருவாகும். சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு. ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு…

  • சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல

    சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு. ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு அதே சாதியில் திருமணம் செய்ய நினைப்பதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும். ஒழுக்கம் இல்லாதவன் ஆணா,…

  • அத்துமீறி நுழைவது சமத்துவம் அல்ல

    எந்த சாதியாக இருந்தாலும் காதல் என்ற போர்வையில் ஒருவன் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைவது சமத்துவம் அல்ல.அதை தடுத்தால் அதன்பெயர் ஆணவம்அல்ல. எந்த சாதியாக இருந்தாலும் காதல் என்ற போர்வையில் ஒருவன் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைவது சமத்துவம் அல்ல.அதை தடுத்தால் அதன்பெயர் ஆணவம்அல்ல.