All Blog Posts
-
100 சதவிகித வாக்குப்பதிவு !
அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்வது ஜனநாயக விழிப்புணர்வா !அல்லது வாக்காளர்களை நிர்பந்திக்கும் செய்யலா! சரியான பதிலை தேர்வுசெய்யும் தேர்வு முறையில் தவறான பதிலை தேர்வு செய்தால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை போல் அரசியல் பற்றிய தெளிவு இல்லாமல் ஜனநாயகத்தை பற்றிய விழிப்புணர்வும் இல்லாதவர்களை வாக்களிக்க வேண்டுமென்று நிர்ப்பந்தித்தால், அரசியல் தெரியாமல் இராமர் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற அறியாமையில் வாழ்பவர்கள் ஏதோ ஒரு கட்சிக்கு வாக்களிப்பதால்…
-
உங்கள் வாக்கு எதற்கு, உணர்வுக்கா? அறிவுக்கா?
உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உணர்வால் முடிவு செய்தீர்களா அல்லது அறிவால் முடிவு செய்தீர்களா, உணர்வின் மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் நன்மையாக தெரிவதால் சரியாகத் தோன்றும். அறிவின்மிகையால் நாம் எடுக்கும் முடிவுகள் நிகழ்காலத்தில் தவறாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும் வருங்காலத்தில் அதுவே நன்மையாக இருக்கும். சுதந்திரம் பெற்ற உடனே ஜனநாயகம் மலர்ந்தது, ஜனநாயகத்தால் சமூக நீதி கிடைத்தது, சமூகநீதியால் குலத்தொழில் ஒழிக்கப்பட்டது, குலத்தொழில் ஒழிக்கப்பட்டதால் அனைவரும் சமம் என்ற நீதி அனைவர் மனதிலும் நீங்கா இடம்…
-
10.5% இட ஒதுக்கீடு சமூக நீதியா? சமூக அநீதியா?
இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்கள் தங்கள் மனசாட்சியை சாட்சியாக வைத்து “இந்த கட்டுரையை படித்தவுடன் 10.5 % ஒதுக்கீட்டில் என் அறிவு சொல்லும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன் “என்றுசத்தியம் செய்துவிட்டு படிக்கவும், காரணம் தனக்கு எது நல்லதோ அதுவே சரியானது என்ற உணர்வின் அடிப்படையில் வாழ்பவர்கள் இந்த சமுதாயத்தில் 1000க்கு999பேர்.கடந்த 10 ஆண்டுகளாக பல அறிவியல் சார்ந்த புதிய நீதியை நான் எழுதி இருக்கின்றேன், ஆனால் படித்தவர்களில் ஒருவர்கூட உணர்வின் நிலையிலிருநது அறிவு நிலைக்கு மாறவில்லை என்பதே…
-
நிர்பந்திக்காதே!
உங்கள் வாக்கு யாருக்கு என்று, நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார். நான் வாக்களிக்கப் போகும் கட்சியின் பெயரை சொன்னேன். அதை கேட்ட நண்பர் நானும் அதற்கே போடட்டுமா என்று கேட்டார். நான் அதற்கு வேண்டாம் என்றேன்.நண்பருக்கு புரியவில்லை, நான் சொன்னேன், நாம் எடுத்த முடிவு நமக்கு சரியானதாக இருக்கலாம் அது மற்றவர்களுக்கும் சரியானதாக தான் இருக்கும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதற்கு உங்களுடைய வாக்கை போடுங்கள்…
-
எது ஜனநாயகம்?
மக்களுக்கு அறிவுரை சொல்லும் ஆட்சியாளர்களும், நீதித்துறையும், தேர்தல் ஆணையமும், ஜனநாயகத்தை மதிக்கிறார்களா என்று முதலில் பார்ப்போம், அதன் பிறகு மக்களிடம் தனிமனித ஜனநாயக கடமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும். 1)மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, MPக்கள் ஜனநாயகத்துக்கு எதிராக இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியது ஜனநாயக படுகொலை, இந்த ஜனநாயக கொடுமையை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லாத ஊடகங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று மக்களுக்கு அறிவுரை கூற தகுதியில்லாத ஊடகங்கள். 2)குற்றம் செய்த…
-
உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?
நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…
-
நம்பிக்கையும், புரிதலும்
யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு. கடவுள் இருக்கு என்ற நம்பிக்கையும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கையும் அறியாமையின் வெளிப்பாடே. ஒரு நம்பிக்கையை மற்றொரு நம்பிக்கையால் சிதைப்பதும் அறியாமையின் வெளிப்பாடே, இந்த இரண்டு நம்பிக்கையையும் தவறு என்று அறிவியலால் புரிந்து கொண்டால் அது தான் அறிவு. இந்த அறிவை…
-
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிறுவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்பதை என் அறிவு பெற்றதால், கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டதால் வளர்ந்த பிறகும் எந்த தவறையும்…
-
நம்மை செதுக்கும் சிற்பிகள்
நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.
-
தூக்குத் தண்டனை சரியா?
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…
All Tags
அறிவின்_தோற்றம், அறிவுரை, தேர்தல்_ஜனநாயகம், தொடர்வினை_தத்துவம், விதி, கடவுள்_நம்பிக்கை, சாதி_அமைப்பு, மொழி_உரிமை, தன்னிலை_வளர்ச்சி, அனுபவ_அறிவு, கடவுள்_மறுப்பு, மனமும்_உணர்வும், அரசுமொழி_அந்தஸ்து, சாதி_ஒழிப்பு_எதிர்ப்பு, பெரியார், திருமணமும்_குடும்பமும், பகுத்தறிவு_விமர்சனம், மறுப்புக்_கட்டுரை, குமார்_விதிகள், குற்றமும்_தண்டனையும், குற்றப்_பொறுப்பு, BJP, நம்பிக்கையின்_பயன், அறிவால்_அனைவரும்_சமம், தூக்குத்_தண்டனை, அரசியல்_பிரிவினை, வாக்காளர்_உரிமை, மதமும்_சடங்கும், மாநில_உரிமை, உச்ச_நீதிமன்றம், இந்தி_திணிப்பு, இட_ஒதுக்கீடு, அனுபவமே_அறிவு, தேர்தல்_இட_ஒதுக்கீடு, அறிவுத்_தற்பெருமை, அறிவு_உணர்வு_மோதல், மதவாத_அரசியல், ஆறாவது_அறிவு, பொருளாதாரக்_கொள்கை, மொழிப்_போராட்டம், இயற்கையின்_நீதி, உணர்வுக்_கட்டுப்பாடு, திருமணத்திற்கு_முந்தைய_காதல், கற்பு, அரசியலமைப்புச்_சட்டம், ஊடகமும்_கலையும், ஏழாவது_அறிவு, நிர்வாகமும்_ஊழலும், சாதி_வன்கொடுமை, இலக்கிய_விமர்சனம், நான்_எனும்_உணர்வு, நீதிமன்ற_அதிகாரம், புத்தக_வாசிப்பு, மூளைச்சலவை, ஊடக_நேர்மை, திமுக, கல்விக்_கொள்கை, இட_ஒதுக்கீட்டுக்_கொள்கை, திரைப்பட_பண்பாடு, தன்_மதிப்பு, உழைப்பு, உள்_ஒதுக்கீடு, ஸ்டாலின், கோயில்_சடங்கு, மும்மொழிக்_கொள்கை, பாலியல்_குற்றம், இளையராஜா, அம்பேத்கர், நட்பும்_உறவும், திருமண_வாழ்க்கை, வாக்கு_வங்கி, தோல்வியை_எதிர்கொள்ளல், ஆன்மீக_வணிகம், திருக்குறள், கலப்புத்_திருமணம், தேர்தல்_பணம், திருமாவளவன், பெண்_ஆண்_வேறுபாடு, பாமக, இலவசத்_திட்டம், அப்துல்_கலாம், ஜெயலலிதா, ஒன்றிய_அரசு, சனாதன_தர்மம், மோடி, தேர்தல்_ஆணையம், NLC, ஜக்கி_வாசுதேவ், லஞ்சம், சங்கர்_கொலை_வழக்கு, பெற்றோர்_சம்மதம், மது_பழக்கம், கருணாநிதி, பெற்றோர்_பிள்ளை_உறவு, பொதுப்_பணி_தரம், NLC_நிலப்_பிரச்சினை, கால்_தொடும்_வழக்கம், வரிக்_கொள்கை, NEET, கல்வி_மொழி, காவல்துறை, விவசாய_மானியம், வைரமுத்து, போட்டி_மனப்பான்மை, விவேகானந்தர், விஜய், காந்தி, ரஜினிகாந்த், வள்ளலார், காவல்துறை_ஊழல், மாற்றமே_நிலையானது, ஏ_ஆர்_ரகுமான், மாணவர்_நெருக்கடி, சீமான், Buddha, அதிமுக, காங்கிரஸ், சாதிக்_கணக்கெடுப்பு, காமராசர், திருவள்ளுவர்
