Politics

  • என் பார்வையில் அரசியல் (அரசியல் விழிப்புணர்வு கட்டுரை)

    அரசியல்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. கல்வி அறிவு இல்லாமல் கூட இந்த உலகில் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக, சிறப்பாக வாழ முடியும், ஆனால் அரசியல் அறிவு இல்லாமல் ஒரு சமுதாயம் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதற்கு சரித்திர நிகழ்வுகளே சான்று. முன்னோர்களின் வரலாற்றை நாம் தெரிந்து கொண்டால்தான் அவர்கள் பட்ட துன்பத்திலிருந்து சிறிதளவு அறிவை நாம் பெற முடியும். அரசியலால் அவர்கள் அனுபவித்த துன்பத்தை நாம் அறிவாக பெறவில்லை என்றால் நாமும், நம் சந்ததிகளும் வருங்காலத்தில் அரசியல்…

  • புதிய நாடாளுமன்ற கட்டிடம்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேறிய முதல் மசோதாவே மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரானதாக உள்ளது.தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது வாக்காளர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது, வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கையை வைப்பதற்கு சமமானது. “முதல் கோணல் முற்றும் கோணல்“ என்பதை போல் ஆரம்பமே சரியில்லை, இன்னும் எத்தனை ஜனநாயக படுகொலைகளை இந்த புதிய கட்டிடத்தில் செய்ய இருக்கின்றார்களோ !

  • சனாதன தர்மம்

    சனாதன தர்மம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் சாகடிக்கப்பட்ட விஷப்பாம்பு. செத்த பாம்பை அடிப்பது போன்றது தான் சனாதன எதிர்ப்பு. செத்த பாம்புக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பது தான் சனாதனத்திற்கு ஆதரவாக பேசுவோரின் நோக்கம். சனாதனம் என்ற வார்த்தையின் பொருள் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை என்பதுதான். தர்மம் என்ற வார்த்தையின் பொருள் நீதி. சனாதன தர்மம் என்பது ஆரம்பமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்கும் நீதி என்று பொருள். வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும் பொழுது…

  • தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு சரியா?

    அறிவு இல்லாமல் அறிவை புரிந்துகொள்ள முடியாது!அனுபவம் இல்லாமல் அறிவை பெறமுடியாது!அனுபவம் இல்லாத படிப்பு அறிவை கொடுக்காது!ஆணும், பெண்ணும் அறிவாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள்! ஆண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும், பெண்களால் புரிந்துகொள்ள முடியாது! பெண்களால் புரிந்துக்கொள்ள கூடிய அனைத்தையும் ஆண்களால் புரிந்துகொள்ள முடியாது!காரணம் ஆணுடைய அறிவும், பெண்னுடைய அறிவும் வேறு வேறு!இது என்னுடைய ஆய்வின் முடிவு. இது அறிவியல் உண்மை. இதை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் புரியவில்லை என்றால் நம்புங்கள்.தேர்தலில் பின் தங்கிய சமுதாயத்திற்க்கும், பெண்களுக்கு இடஒதுக்கீடு…

  • தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ஜனநாயகத்துக்கு எதிரானது

    தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை!என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேர்மையான அரசியல் தலைவர் ஒருவர் கூட இல்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என்னுடைய வாக்கு என் உரிமை, இதை பணத்துக்காகவோ, மதத்துக்காகவோ, சாதிக்காகவோ, சுயநலத்துக்காகவோ, அல்லது நாட்டு நலனுக்காகவோ, எதற்காக வேண்டுமானாலும் என் உரிமையை பயன்படுத்தலாம், இதில் அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிடுவது ஜனநாயகம் அல்ல. தேர்தல் ஆணையத்தின் பணி, வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது அல்ல, அவர்களின் உரிமையை…

  • எது சாதி பாகுபாடு

    NLC நிர்வாகம் விளைநிலங்களை அழிப்பதை பார்த்து பாமரன் முதல் உயர் நீதிமன்ற நீதிபதி வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். காரணம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு உணவு கொடுக்கக்கூடிய நிலத்தை அழிக்கின்றார்களே,இனி இந்த நிலம் பாலைவனம் போல் ஆகிவிடுமே என்ற அச்சம் தான். இந்த நிலையில் இந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திருமாவளவன் எம்பி ஏன் மக்களின் உணர்வை இதுவரை வெளிப்படுத்தவில்லை ?காரணம் நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் (இவர்கள் பாணியில்…

  • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மண்டையில் இது ஏறுமா?

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் என் எல் சி யை எதிர்த்து முற்றுகை போராட்டம் நடத்தியது என் எல் சி க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு அதிக இழப்பீடு வாங்கி கொடுக்க அல்ல. வரும் காலத்தில் கடலூர் மாவட்டம் மக்கள் தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் செத்து மடிந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 60 ஆண்டு காலமாக நெய்வேலியை சுற்றி உள்ள பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல்…

  • எதிர்த்து அடி

    அடிப்பதை தடுத்து கொண்டு இருந்தால் தொடர்ந்து அடித்துக் கொண்டு தான் இருப்பார்கள், நாம் திருப்பித் தாக்கினால் தான் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஹிந்தியை எதிர்ப்பது என்பது அடியை தடுப்பது போல் தான், இது போன்ற மக்களை ஏமாற்றும் அரசியலை திரு ஸ்டாலின் அவர்கள் செய்யாமல் அனைத்து மாநில மொழிகளுக்கும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழி உரிமை வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடத்தினால் மட்டுமே நம் மொழியை நாம் பாதுகாக்க முடியும். மொழியைப்…

  • பெரியார் நாத்திகர் அல்ல !

    இன்றைய மத வெறுப்பு அரசியல் தொடர்ந்தால் நாடே போர்க்களமாக மாறி விடும் என்பது உறுதி. எச்சரிக்கை ! நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் பிரிவினையால் போர்க்களத்தில் தன் உயிரை விட்டவர்களின் அனாதை பிள்ளைகளின் வாரிசாக தான் இருப்போம், நம் முன்னோர்கள் குழந்தை பருவத்தில் தெரு நாயை விட அதிக கொடுமைகளை அனுபவித்து இருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நாம் கடந்த 75 ஆண்டுகளாக தான் ஓரளவிற்கு அமைதியான வாழ்வை வாழ்கின்றோம். அதை நாம் இழந்துவிடக்கூடாது. மனிதனும்…

  • மொழி விடுதலைக்கு புதிய உத்தி

    செப்டம்பர் 14 யை ஹிந்தி தினமாக கொண்டாடும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் எதிர்ப்யை தெரிவித்து அனைத்து மாநில மொழிகளையும் ஹிந்திக்கு நிகரான தேசிய அலுவல் மொழியாக அறிவித்து, அனைத்து தேசிய அலுவல் மொழி தினமாக செப்டம்பர் 14 யை கொண்டாட வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கைக்கு காரணம் மே 2013 அன்று நெய்வேலியில் ஒருவருடைய சிந்தனையில் உருவான சிறுபொரி தான் என்றால் நம்பமுடியுமா !…