Politics

  • சபதம்

    சுதந்திர தின உறுதிமொழி இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 14 ளின் படி அனைத்து மாநில மக்களும் சமம் என்ற பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எப்போது இந்தியை போல் அனைத்து மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் கிடைக்கின்றதோ அப்போதுதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன் என்று சபதம் ஏற்கின்றேன்.

  • சும்மா இருந்தாலும் அதுவும் புரட்சி தான்

    ஆகஸ்ட் 15, ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் மட்டுமல்ல இதே நாளில்தான் நாம் இந்தி பேசும் வட இந்தியர்களிடம் மொழி அடிமைகளாக அடிமைப்பட்டு, மொழி அடிமைகள் என்ற புரிதல் இல்லாமல் மூன்று தலைமுறையாக சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அடிமைகள் நாம்தான். புரட்சி என்பது ஆயுதத்தை கையில் எடுப்பது அல்ல, ஒவ்வொருவர் மனதிலும் நாம் மொழி அடிமைகளாக இருக்கின்றோம் என்ற புரிதல் அரும்பினாலே போதும் அதுதான் புரட்சி. இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம்…

  • சுயமரியாதை

    இந்துமத நடைமுறையில் சமத்துவம் மறுக்கப்படுகின்றது என்று குரல் கொடுக்கும் சுயமரியாதை இயக்கமான திக, திமுக தலைவர்கள், இந்த நாட்டின் உயர் பதவியில் உள்ள ஜனாதிபதி, விருது வழங்கும் விழாவில் சமத்துவம் இல்லாமல் விருது வாங்குபவர் ஜனாதிபதியை விட ஒரு படி கீழே இருந்துதான் விருதை வாங்க வேண்டும் என்ற நடைமுறை சுயமரியாதை இயக்கமான திக, திமுக வுக்கு தெரியாதா! ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தகுதி எம்எல்ஏ, எம்பி க்கு இருப்பதால், ஜனாதிபதியின் தவற்றை சுட்டிக்காட்டவும் எம்எல்ஏ, எம்பி க்கு…

  • பல்லக்கு தூக்குவது சரியா?

    சட்டத்தின் பார்வையில் அனைவரும் சமம் என்பதால் மனிதனை மனிதன் பல்லக்கில் சுமப்பது தவறு. எனவே தமிழக அரசு தடை விதித்தது சட்டப்படி சரியே, ஆனால் பல்லக்கு தூக்குவது என்பது தேர் இழுப்பது போல் ஒரு பாரம்பரிய நிகழ்வு என்றால் அரசு அனுமதித்தால் தவறு இல்லை. சாதியால் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்துவது சட்டத்தின் பார்வையில் வன்கொடுமை என்பதால், பாரம்பரியப்படி உயர்ந்த சாதியினரை தான் தாழ்ந்த சாதியினர் பல்லக்கில் வைத்து சுமந்தார்கள், எனவே பல்லக்கில் இருப்பவர் எந்த சாதியோ அதே…

  • மொழியின் தேவைக்கும், உரிமைக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளாதவர்களுக்கு!

    இந்தி பேசுபவன் மட்டும்தான் இந்தியன் என்று வட இந்தியன் சொல்வதால் ! தென் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் அங்கீகாரம் பெறுவதே நாம் இந்தியன் என்பதற்கான அங்கீகாரம். நம் மொழிக்கான அங்கீகாரம் தான் நமக்கான அங்கீகாரம் என்பதால்தான், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவானதிலிருந்து தொடர்ந்து மொழி உரிமைக்கு தமிழகம் போராடுகின்றது. பிற மொழிகளை நாமாக விரும்பி கற்பது தவறல்ல, கல்வித்திட்டத்தில் பிறமொழிகளை கட்டாயப்படுத்தி திணிப்பது தான் நம் உரிமைக்கு எதிரானது. இதை…

  • என் வாக்கு… என் உரிமை…

    தேர்தலில் இட ஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை!என்ற விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல நேர்மையான அரசியல் தலைவர் ஒருவர் கூட இல்லை என்பதை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. என்னுடைய வாக்கு என் உரிமை, இதை பணத்துக்காகவோ, மதத்துக்காகவோ, சாதிக்காகவோ, சுயநலத்துக்காகவோ, அல்லது நாட்டு நலனுக்காகவோ, எதற்காக வேண்டுமானாலும் என் உரிமையை பயன்படுத்தலாம், இதில் அரசியல் கட்சிகளும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிடுவது ஜனநாயகம் அல்ல. தேர்தல் ஆணையத்தின் பணி, வாக்காளர்களின் உரிமையில் தலையிடுவது அல்ல, அவர்களின் உரிமையை…

  • மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ?

    இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டது சரியா ? தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக டாக்டர் அம்பேத்கர் இருப்பதால் நான் அவரை மதிக்கின்றேன். தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி பெற வேண்டும் என்பதற்காக, மோடி யை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்திற்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இடமே முன்னுரை வாங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி இளையராஜாவிடம் பிஜேபி ஆதரவைப் பெற்று இருப்பது என்பது முழுக்க அரசியல். அம்பேத்கருடன் மோடியை…

  • ஜனநாயகப் பண்பு

    ஜனநாயகத்தில் அனைவரின் கருத்தையும் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகம். எனக்கு சரி என்று தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாக தோன்றும், அதனால் அவரை இழிவாகப் பேசுவது நற்பண்பு அல்ல. இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை சிறந்த பிரதமர் என்று புகழ்ந்து இருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அது அவருடைய கருத்து, அதை ஏற்பதும் ஏற்காததும் என்னுடைய விருப்பம். ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு வாக்கு தான், அவருக்கும் ஒரு வாக்கு தான். பிரதமரை ஆதரிப்பது அவருடைய உரிமை என்றால் எதிர்ப்பது…

  • வேண்டும்! வேண்டும்!! மொழி சுதந்திரம் வேண்டும்!

    ஒரு தனி மனிதரை மையமாக வைத்து பலர் பின் தொடர்வது கிளர்ச்சி, சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ( centrifugal force). வெற்றிடத்தை மையமாக வைத்து கொள்கையின் உந்துதலால் பலர் ஒன்றாக இனைவது புரட்சி, புயல் ஒரு வெற்றிடத்தை மையமாக வைத்து உருவாவது போல் ( tornado force). ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிடத்தை மையமாக வைத்து, தலைமை இல்லாமல் கொள்கையால் இணைந்த போராட்ட இயக்கம் அதனால் தான் புயலைப்போல் அதன் வேலை முடிந்ததும் தானாகவே வலுவிழந்து…

  • மொழி சுதந்திரப் போராட்டம்

    அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று, இந்தியைப் போல் 22 மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் ஒன்றுதிரட்டி போராடுவதால் நிச்சயம் இந்த முறை நமக்கு மொழி சுதந்திரம் கிடைத்து விடும். அரசியல் சுயநலமில்லாமல் ஒன்றிணைவோம் !போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!