Politics

  • முத்தலாக் தடை சட்டம்

    இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? இஸ்லாமிய தம்பதிகள் இனி சேர்ந்து வாழ்வார்களா? இதுதான் நம் கேள்வி. இந்து மதக் கலாச்சாரப்படி ஒரு ஆண் ஒரு பெண் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விட்டால் போதும்,அன்று முதல் அவள் அவனின் மனைவி.இது எப்படி! யார் வேண்டுமானாலும் யார்கழுத்திலும் கயிறை கட்டிவிட்டால்…

  • பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்

    ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால்மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு,உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான்.கடமையை விட்டுக்கொடுத்தால் துரோகம்.உரிமையை விட்டுக்கொடுத்தால் தியாகம்.கொள்கை இல்லா தலைவர்கள் இருப்பதால்தான்,பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள்

  • மகளிர் மசோதா

    அனைத்துத் தொகுதியிலும் ஆண் பெண் வேற்றுமை இல்லாமல் அனைவரும் போட்டியிடலாம் என்பது திறனுள்ளவர் மக்களுக்கான பணியை செய்ய எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்கின்றது. ஆனால் புதிய மகளிர் மசோதா ஆண்களை அடிமைப்படுத்தும் செயல், ஓட்டுக்காக மக்களை முட்டாளாக்கும் செயல். சோதனை முயற்சியாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து 33 குடும்பத்தை பெண்கள் நிர்வகிக்க வேண்டும், சுழற்சி அடிப்படையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் வேறு 33 குடும்பத்தை பெண் நிர்வகிக்க வேண்டும் ஆறு ஆண்டுக்குப் பிறகு…

  • NLC நீர்பந்தல்

    மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. தமிழக மக்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் வட நாட்டு அதிகாரியின் இந்த செயலை நாம் அனைவரும் கண்டிப்போம். இந்த போராட்டம் இந்திக்கு எதிரான போராட்டம் அல்ல, தென் இந்திய மாநில மக்கள் அனைவருக்குமான மாநில மொழி உரிமை போராட்டம். இதில் தமிழ், மலையாளம், கன்னடம்,…

  • நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு அல்ல.

    நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்று என்னாதீர்கள். அது தென் இந்திய மக்கள் அனைவரையும் அடிமை படுத்துவதற்க்கான மத்திய அரசின் சூழ்ச்சி. இந்தியாவில் CBSE, MATRIC, மாநில அரசு கல்வி முறை என்று பல பாடதிட்டங்கள் இருக்கும் போது CBSE பாடதிட்டம் மூலம் மாணவர்களை மருத்துவர்களாக தேர்ந்து எடுக்கும் முறை எப்படி சரியான தாக இருக்கும். நாடு முழுவதும் பல கல்வி முறையில் படித்த மாணவர்கள் எப்படி ஒரு கல்வி முறையால் தேர்வு…

  • இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது

    இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மையை பார்த்த பிறகாவது இனி மக்களை ஏமாற்றாமல் அரசியல் தலைவர்கள் நேர்மையாக ஆட்சி செய்யவேண்டும்.

  • தேர்தல் கருத்துகனிப்பு ஊடகங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம்

    நான் எழுதிய ஏழாவது அறிவு என்ற ஆய்வு புத்தகத்தின்படி ஒரு மனிதன் எதை பார்கின்றானொ, எதை கேட்கின்றானோ அது அவனை அவன் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்து விடும் என்பது விதி.அதன்படி ஊடகங்களின் தேர்தல் கருத்துகணிப்பு ஒருவரை ஆள ஆரம்பித்து விடுகின்றது,அதனால் அவன் ஓட்டு போடவிரும்பியவருக்கு போடாமல், வேறு ஒருவருக்கு ஓட்டு போடும் நிலையை ஊடகம் உறுவாக்குகின்றது என்பது உண்மை. இந்த தேர்தளை பொருத்தவரை யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றார்கள்…

  • தனி மனிதஉரிமை, சமத்துவம், நட்பு

    தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..ஒருவர் அவர் வீட்டுக்குள் யாரை அனுமதிப்பது என்பதை தீர்மானிப்பது தனிமனித உரிமை..சாதி, மதம், பாராமல் பழகுவது நட்பு, அதன் பெயர் சமத்துவம் அல்ல…நாம் வளர்க்கும் நாய் நம்முடைய படுக்கையரைவரையில் அனுமதிப்பதன் பெயர் சமத்துவம் அல்ல, அது நட்பு!கோவிலில் பணக்காரனுக்கு தனிவழி இருப்பது சமத்துவம் அல்ல,அது ஏழை, பணக்காரன்…

  • தாய் மொழி சுதந்திரம்

    முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக்க கேட்கும் கேள்வியாகவே இதுவரை உள்ளது… முட்டை எங்கிருந்து வந்தது என்று கேட்டல்தான், பரினாம வளர்ச்சியால் முட்டை வந்தது என்று சரியான பதிலை சொல்லலாம், இரண்டில் ஒன்றை தான் சொல்ல வேண்டும் என்று தவறான கேள்வியை கேட்டால் சரியான பதில் எப்படி கிடைக்கும்?… அதுபோல் இந்தியாவில் 22 மாநில மொழிகள் இருக்கும்…

  • மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?

    இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது அரசியல் சுயநலத்துக்காக தான்.அவர்களுக்கு தமிழர்கள் மீதும், மொழியின் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் அரசியல் கைக்கூலிகள். பதவி அதிகாரத்தைப் பெற மக்களின் மொழி உணர்வை கருணாநிதி பயன்படுத்தியதை போல் ஸ்டாலின் செய்யாமல், உண்மையிலேயே தமிழுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் மொழி…