பெரியார்
-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது. பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது. திமுக வின்…
-
பெரியார்
பெரியார் (ஈ. வெ. ராமசாமி) அவர்கள் கடவுளை வணங்குபவர்களை காட்டுமிராண்டி என்று சாடியவர், சமத்துவத்தை வலியுறுத்தியவர், இந்து மதத்தை விமர்சித்த இவர் தன் பெயர் இந்து மத கடவுளின் பெயராக இருந்தும் தன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. சமத்துவத்தை விரும்பும் பெரியார் தன்னை மற்றவர்கள் சாமி என்றே அழைக்க வேண்டும் என்று விரும்பி உள்ளார்.பெரியார்..,அவருடைய பெயரை பொருளற்ற அடையாளமாகவே பார்த்ததால்தான் அவருடைய பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. ஏழுமலை என்ற பெயரை எந்த மொழியில் எழுதினாலும் ஏழுமலை தான்.…
-
சமத்துவம்
புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியார் சமத்துவத்தை பேசியது அரசியல் வெளிப்பாடு, சமத்துவம் பேசும் அனைவருக்கும் பல காரணம் இருக்கின்றது. இங்கு சமத்துவம் பேசுகின்றவர்கள் உயர்ந்த உடன் மற்றவர்களை அடிமைப்படுத்தும் குனம் இயல்பாகவே உள்ளது. மனிதன் சமத்துவம் பேசுவது சுயநலத்துக்காகவே, மனிதன் மிருகம் போல தான் உயர்ந்துவிட்டால் தாழ்ந்தவனை அடிமைப்படுத்தாமல் இருக்க மாட்டான், எனவே சமத்துவத்தை சரியாக…
-
தேர்தல் இடஒதுக்கீட்டால் மக்களிடம் சமத்துவம் மலருமா?
தேர்தலில் இடஒதுக்கீடு என்பது ஜனநாயக படுகொலை, கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது சமுதாய நீதி, தனிமனித உரிமை என்ற என்னுடைய ஆய்வுக்கட்டுரையை பல ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் அது யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதற்கு காரணம் தனக்கு எது நல்லதோ அது தான் சரியானது என்ற சிந்தனை நம்மில் பலரிடம் இருப்பதும், புதிய கருத்தை வெளிப்படுத்த அஞ்சுவதுவுமே,எல்லோரையும் போல் மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று சொல்லி விட்டால் பிரச்சனை இல்லை. கடவுள் தெரியவில்லை என்று சொல்லி விட்டால்…
-
மனிதன் மாற மாட்டான்
ராமர் படத்தை செருப்பால் அடித்தால் பத்து ரூபாய் கொடுப்பதாக சொன்னால் ஊரே ஒன்று சேர்ந்து ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,காரணம் மனிதன் தன்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்ள எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விரும்புவது இல்லை என்பது மனிதனின் இயல்பு. கல்வியும், வேலைவாய்ப்பும், சமத்துவமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்பட்டதால் அவன் வனங்கிய தெய்வத்தை கூட எதிர்க்க தயங்க வில்லை என்பதுதான் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.…
-
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்?
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ?கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா?சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.ஆனால் ஒரு மதத்தை சார்ந்தவர்கள் வணங்கும் கடவுளின் படத்தை செருப்பால் அடித்து சிறுமை படுத்தினால் அது மத நம்பிக்கைக்கு எதிரான குற்றம். இதை பெரியாரும், திராவிடர் கழகத் தொண்டர்களும் 50 ஆண்டுகளுக்கு முன் செய்தார்களா என்றால்,…
-
பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?
பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம். ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.…
-
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்
உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…
-
பெரியாரின் பகுத்தறியாமை
யார் சொல்லியிருந்தாலும்,எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. —-பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரிந்து கொண்டவர்கள் பெரியாரையும் சேர்த்து இந்த உலகில் யாருமில்லை. ஒன்றை ஓருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை சார்ந்த அறிவு அவரிடம் இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எதை ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, என்றால் ஒருவர் எப்படி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். மருத்துவர் சொல்வதை…
