Opinion

  • ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும்

    தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்…

  • மன்னிப்பு

    தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…

  • அன்பே அழகு

    குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம்…

  • திருமண வாழ்த்துக்கள்

    திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற்கான தீர்வை பதிவு செய்து உள்ளேன். நாம் பெற்ற அறிவு தான் நம் வாழ்க்கைக்கு சூனியம், நாம் பெற்ற அறிவே நம்மை உணர்வுபூர்வமாக வாழ விடாமல் தடுக்கின்றது. சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் (18 வயது முதல் 25 வயதிற்குள்)இருமணம் கலந்து அன்போடும்,…

  • காதல் புனிதமானதா?

    காதல் புனிதமானதா ? இதயம் கண்களால் பேசினால் காதல் !உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் !ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்!பலமுறை வந்தால் அது காமம்!இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய்வீகமானது, இரண்டு இதயங்களின் தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு ஆத்மாக்கள் கலப்பதாகும், இந்த நிகழ்வுகள் காற்றாலும், நிலவாலும், இயற்கையாலும் மட்டுமே நடைபெறுகின்றது, அதனால்தான் சங்க இலக்கியங்களில் காதலுக்கு காற்றையும், நிலவையும், தூது விட்டார்கள்.இந்த நிலை ஆழ்ந்த தியானத்திற்கு சமமானது. இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள பரிசுத்தமான…

  • உடுமலைப்பேட்டை சங்கர்

    உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர் குடும்பமும், ஆனந்தமான வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள். சங்கரும், கௌசல்யாவும், சிறு வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களை சீரழித்தது நம்முடைய சட்டமும், காவல் துறையும் தான்.ஒழுக்கம் இல்லாத கௌசல்யாவுக்கு பாராட்டும், ஒழுக்கமாக வாழ்ந்த கௌசல்யா பெற்றோர்களுக்கு ஆணவக்காரர்கள் என்ற பட்டயம் கொடுத்ததும் நம் ஊடகங்கள் தான்.இதுபோன்ற தொடர் நிகழ்வுகளின்…

  • பெண் பாவம்

    பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை நக்கீரன் கோபால் அவர்களின் நேர்காணலை 9 நிமிடம் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அண்ணா என்று அந்தப்…

  • போட்டி

    பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!போட்டி நம் நிம்மதியை கெடுக்கும் !போட்டியும், பொறாமையும், ஆறாவது அறிவால் மனிதன் பெற்ற சாபம். சாலையில் சம்மந்தமே இல்லாதவர்களுடன் போட்டி போட்டு விபத்தை ஏற்படுத்துவதுபோல், வாழ்க்கையில் சம்பந்தமில்லாமல் பலருடன் போட்டிபோட்டு பலர் வாழ்க்கையை போட்டியில் தொலைத்துவிடுகிறார்கள். போராடுவோம் !வெற்றி பெறுவோம்!போட்டியை தவிர்ப்போம்!

  • யார் மனிதன்?

    தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிருகத்தை விட கொடியவன். சுற்றம் பாதிக்கும் வகையில் மது அருந்துவது, பொது இடத்தில் புகை பிடிப்பது, பொது இடத்தை அசுத்தம் செய்வது, பெற்றோர் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்துகொள்வது, பாலியல் துன்புறுத்தல் செய்தல், அனைத்தும் மிருக செயல்தான். கொடிய மிருகத்தை விடகொடியவன், மிருகம் கூட…

  • பாலியல் துன்புறுத்தல் #metoo

    நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் காதலித்தவனுக்கு அரபு நாட்டில் தூக்கு தண்டனை கொடுப்பது உலக நீதி அல்ல. திரை உலகம், பாலியல் ஒழுக்கத்தில் அது ஒரு தனி உலகம்.திரை உலகத்தின் பாலியல் நீதி என்பது, நிஜ உலகத்தின் நீதிக்கு முற்றிலும் முரணானது. திரை உலகத்தில் ஆண்-பெண் வேற்றுமையே இல்லை, எனவே அங்கு…