அறிவின்_தோற்றம்
-
படித்தவன்
தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.
-
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், அறியாமையே காரணம்.
புத்தர், பட்டினத்தார் போன்ற அரசர்கள் ஞானம் பெற்ற உடன் அவர்களுடைய அறிவைப் பயன்படுத்தி பல நாடுகளை வெற்றி கொண்டு தன்னுடைய ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தி சாதனை படைத்திருக்கலாமே !பிறகு ஏன் அறிவு வந்தவுடன் இயல்பான வாழ்க்கையை வாழாமல் துறவு கொண்டார்கள் ! உணர்வுபூர்வமான, இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு, கற்பு போன்ற அறியாமையே ஒரு மனிதனுக்கு தேவைப்படுகின்றது,எனவே உலகில் உள்ள அனைவரும் ஞானம் பெற்று வாழ்க்கையை ஞானத்தால் தொலைக்க வேண்டுமென்று அவசியமில்லை, எனவே நோயை குணப்படுத்த ஊருக்கு ஒரு…
-
மரணிக்கும் அறிவு
ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்று திருவள்ளுவர், புத்தர் போன்ற பல ஆயிரம் மகான்கள் மற்றும் பல ஆயிரம் கோடி மக்கள் வாழ்ந்த இந்த உலகில் வாழத் தெரியாமல் வாழும் இன்றைய சமுதாயமே. முன்னோருக்கும் முன்னோரின் அறிவை நம் முன்னோர்களும், நாமும் பெற்று இருந்தால் உண்மையான ஆன்மீகத்தையும்,…
-
காரணமும்,காரியமும்
காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு. விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக்…
-
விதியை நம்புதலும், புரிதலும்
நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மிடம் இருக்கும். பெரும்பாலானவர்கள் நம்புவதையே புரிந்ததாக எண்ணுகின்றார்கள், தகவல் சேகரிப்பதையே அறிவாக எண்ணுகின்றார்கள், அதனால் தான் படித்தவன் அறிவாளியாக இந்த உலகில் பார்க்கப் படுகின்றான். 2+2=4,4×4=16 என்பதை புரிந்துகொண்டால் கணிதம் வாழ்க்கைக்கு பயன்படும். புரிந்து கொள்ளாமல் ஆசிரியர் சரியாகத்தான்…
-
பயன்படாத ஒற்றை செருப்பு
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெரிந்து கொள்கின்ற தகவலால் பயனில்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு வரிகளை புரிந்துகொள்ளவே இதைப் படிக்கின்ற வாசகர்களுக்கு அறிவை சார்ந்த அறிவு இருக்க வேண்டும் இல்லை என்றால் என் எழுத்து பயனற்றது தான். எழுத்தாளர்களும் அவர்களுடைய எழுத்துக்களும் மக்களிடம் பிரபலம் ஆவதற்கு காரணம், மக்களிடம்…
-
விதியை நம்பாதீர்கள் !
விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…
-
முகமூடி
“உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல் “முகமூடி”என்ற இந்த ஆய்வு கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மனம் திறந்து பாராட்டிய நல் உள்ளங்களே காரணம். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். என்னுடைய எழுத்தை தொடர்ந்து படிக்கும் சிலர் அதன் வலிமையை புரிந்து, இதுபோன்ற எழுத்தை…
-
மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது. நமக்குத் தெரிந்தது…
-
மாசிமகம்
தை மாத அறுவடையை விவசாயிகள் மாசி மாதத்தில் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது ஏமாற்றி வழிப்பறி செய்யும் பார்ப்பனர்களின் சூட்சம செயல்தான் மாசிமகம். இதை புரிந்து கொள்ளாதவர் கல்வி பயின்று எந்த பயன்?
