Understanding knowledge

  • ஒரே இடத்தில் தேங்கி விடாதே

    ஒவ்வொரு உணர்வுகளும் தனித்தனி உலகம். ஒரு உணர்வில் வாழும் பொழுது மற்றொரு உணர்வு உலகத்தில் நாம் வாழ முடியாது. ஒரு மனிதன் பல உணர்வு உலகில் மாறி மாறி வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. அன்பு, பாசம், குடும்பம், உணவு, விளையாட்டு, போட்டி, பணம், படிப்பு,புகழ், பதவி, காமம், நட்பு, என்று பல உணர்வுகள் மனிதனுக்கு இன்பத்தை கொடுத்தாலும், ஒரே ஒரு உணர்வு உலகத்தில் தன் வாழ்க்கையை தொலைத்து விடுவதை நன்மையாக இருந்தால் சாதனையாக பார்க்கின்றார்கள், கெடுதலாக இருந்தால்…

  • வெற்றியும், தோல்வியும்…

    வெற்றியும், தோல்வியும் இரண்டு மார்க்கங்கள். எந்த மார்க்கமாக நாம் பயணம் செய்தால் நன்மைகள் நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. எனவே வாழ்க்கையில் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் சமமாக நினைத்து ஆணவம் இல்லாமலும், தாழ்வு மனப்பான்மை இல்லாமலும் வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே இன்பமாக வாழ முடியும்.

  • துறவு

    இன்பமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு தான் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் புதிய அறிவை தேடுகின்றோம், நான் தேடியதில் புதிதாக எனக்கு கிடைத்த அறிவை அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பதிவிடுகின்றேன். துறவு என்றால் என்ன?துறவு நமக்கு இன்பத்தை கொடுக்குமா? என்பதுதான் நம்முடைய கேள்வி. துறவு என்ற வார்த்தைக்கு “விடுதல் “மற்றும் “வாய்ப்பான நிலை” என்று பொருள். துறவு என்பதற்கு அனைத்தையும் துறக்க வேண்டும் என்று பொருள் கொள்வது தவறு. துறவு வாழ்க்கை வாழ்பவர்களுக்கு அடுத்த…

  • AI எனும் செயற்கை மூளை

    artificial intelligence செயற்கை நுண்ணறிவைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை. அறிவு என்றால் என்ன, ஆறாவது அறிவு என்றால் என்ன, மனிதன் எப்படி சிந்திக்கின்றான்,எப்படி செயல்படுகின்றான் என்பதைப் பற்றி ஆய்வு செய்து “குமார் விதிகள் “என்ற ஆய்வு புத்தகம் எழுதி இருக்கின்றேன். https://drive.google.com/file/d/1uO8Dul1V859ifE8qT_s0DNNBQDaU3X_4/view?usp=sharing ”குமார் விதிகள் “என்ற என்னுடைய புத்தகத்தை படித்து புரிந்து கொண்ட பிறகு இந்த கட்டுரையை படித்தால் தான் AI யின் பலமும், பலவீனமும் வாசகர்களுக்கு தெரிய வரும். அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின் முடிவு, ஒரு…

  • கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?

    இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்ற ஒருவர் தினமும் மது அருந்துவேன், புகைபிடிப்பேன் என்று பொதுவெளியில் சொல்கின்றார் அதை பார்வையாளர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து ரசிக்கின்றார்கள்.எதை இந்த மக்கள் விரும்புகின்றார்கள்!எதை நோக்கி இந்த சமுதாயம் செல்கின்றது! உணர்வை ஆளுமை செய்ய முடியாமல் பெரும்பாலானவர்கள் மதுவில் தன்னுடைய வாழ்க்கையை தொலைக்கின்றார்கள், மீதம் உள்ளவர்கள்…

  • பாலம்

    ஆறாவது அறிவு இல்லாத மனிதனும், மிருகமும் அறிவால் ஒன்று. மிருகமாக இருக்கும் மனிதர்களுக்கு ஆறாவது அறிவை கொடுப்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுவதால் இந்த கட்டுரைக்கு “பாலம் “என்று தலைப்பு வைத்துள்ளேன்.ஆறாவது அறிவு என்பது பகுத்தறிவு அல்ல, மிருகத்திடமும் பகுத்தறிவு இருப்பதால் ஆறாவது அறிவு என்பது உணர்விலிருந்து விடுபட்டு சிந்திப்பதால் பெறுவதே ஆறாவது அறிவு. நான் 25 சதவிகிதம் மிருகமாகவும், 50 சதவிகிதம் மனிதனாகவும்,மிதம்உள்ள 25 சதவீதம் உணர்வில்லாத இயந்திரம் என்ற நிலைக்கு நான் சென்றதால் தான் ஆறாவது…

  • ஆறாவது அறிவின் அளவுகோல்

    அறிவு என்றால் என்ன ?ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும் இந்த அறிவைப் பெறவில்லை நான் எழுதிய புத்தகத்தை படித்து அதை அறிவாக பெற முடியாத அறிவில்லாதவரிடம் இருந்து நான் பெற்ற அனுபவத்தால் தான் இந்த அறிவை பெற்றேன். நம்முடைய ஐந்து புலன்களின் அனுபவத்தால் பெறுவதுதான் அறிவு. அந்த, அந்த புலன்களின் வேலையை அந்த, அந்த புலன்கள்…

  • முன்பிறவி கர்மா உண்மையா?

    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள். ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக…

  • அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்…

    அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நாம் அவர்களிடம் பழகலாம். அறிவின் அளவுகோல் தேவைப்படுகின்றவர்கள் விருப்பத்தை தெரிவித்தால் கொடுக்கின்றேன்.

  • மதியால் விதியை வெல்ல முடியாது!

    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும் மதியால் விதியை வெல்லலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். அறியாமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேற்றுமை உண்டு கண்ணால் பார்க்க முடியாததை பார்க்காமல் இருப்பது அறியாமை,கண்ணருகில் காண்பித்தும் பார்க்க முடியவில்லை என்றால் அது முட்டாள்தனம். என்னுடைய ஆய்வை வெளி உலகத்திற்கு செல்ல விடாமல்…