குற்றமும்_தண்டனையும்
-
உடுமலைப்பேட்டை சங்கர்
உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர் குடும்பமும், ஆனந்தமான வாழ்வை வாழ்ந்து இருப்பார்கள். சங்கரும், கௌசல்யாவும், சிறு வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களை சீரழித்தது நம்முடைய சட்டமும், காவல் துறையும் தான்.ஒழுக்கம் இல்லாத கௌசல்யாவுக்கு பாராட்டும், ஒழுக்கமாக வாழ்ந்த கௌசல்யா பெற்றோர்களுக்கு ஆணவக்காரர்கள் என்ற பட்டயம் கொடுத்ததும் நம் ஊடகங்கள் தான்.இதுபோன்ற தொடர் நிகழ்வுகளின்…
-
பெண் பாவம்
பெண் பாவம் பொல்லாதது, கண்ணகிக்கு ஏற்பட்ட கொடுமையால் மதுரை மாநகரமே தீயில் அழிந்தது என்பது வரலாற்று உண்மை. எனவே இப்போது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதால் இந்த நாடு தீப்பற்றி எரிந்து அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தியை நக்கீரன் கோபால் அவர்களின் நேர்காணலை 9 நிமிடம் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அண்ணா என்று அந்தப்…
-
தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி.சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் பொருளாதாரம், அதிகாரம், கல்வி, இனம், மொழி, மதம், அனைத்திலும் இருக்க வேண்டும். தான் உயர்ந்தவன் என்று எவன் ஒருவனும் எதிலும் நினைக்கக் கூடாது.இதற்கு பெயர் தான் உண்மையான சமத்துவம் அதற்கான விதைத்தான் என்னுடைய ஆய்வு, இந்த ஆய்வின் முடிவை புத்தகமாக எழுதி ஊடகங்களுக்கும் பல பெரிய மனிதர்களுக்கும் அனுப்பி…
-
எச்சரிக்கை மணி
திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை…
-
பேரறிவாளனின் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல்
பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், இன்று ஹாசினியின் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை அறிவற்ற செயல் என்று எதிர்க்கின்றேன்.இதையும் புரிந்து கொள்ளாமல் என்னை முட்டாள் என்று என்னும் வாசகர்களே நான் பெற்ற புதிய அறிவை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். ”உன் செயலுக்கு நீ காரணம்…
-
சங்கர் கொலை வழக்கு
சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்த ஒருவர் இவனை கொலை செய்தால்தான் இதுபோன்ற தவறை வேறு ஒருவன் இந்த சமுதாயத்தில் இனி செய்யமாட்டான் என்று எண்ணி கொலை செய்ததில் என்ன தவறு உள்ளது. மக்களிடம் சமத்துவம் மலர கொலையோ, தூக்குத் தண்டனையோ, தீர்வு அல்ல.அதற்குத் தீர்வு நீதித்துறை…
-
சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடியவில்லை இறந்த காலத்தின் நிகழ்வுகள்தான் ஒருவனுடைய இன்றைய செயலை தீர்மானிக்கின்றன என்பதை சமுதாயம் அறிவியல் பூர்வமாக உணர்ந்த பின் குற்றவாளியின் செயலுக்கு தண்டனை கொடுப்பது சரியா? சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
-
என் ஆய்வு முடிவுகள்
1.அறிவால் அனைவரும் சமம். 2.அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது. 3.அறிவு என்பது படிப்பை அடிப்படையாகக் கொண்டது அல்ல. 4.அறிவு இல்லாமல் அறிவைப் பெற முடியாது. அறிவை அறிவால் ஆளுமை செய்வது ஏழாவது அறிவு. 5.எதை நாம் பார்க்கின்றோமோ, எதை நாம் கேட்கின்றோமோ அது நம் அனுமதி இல்லாமலேயே நம்மை ஆளும். 6.திருமனத்திற்கு முன் காதல் என்பது விபச்சாரத்திற்கு சமமானது. 7.தூக்கு தண்டனை என்பது அறிவற்ற சமுதாயத்தின் செயல். 8.தண்டனை என்ற வார்த்தையே புதிய நீதிக்கு…
-
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும்.
“வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது.காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்” பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்னதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு.அனுபவமுள்ள பெரியவர் சொல்வதை அனுபவமில்லாத சிரியவர் கேட்டு நடந்தால் நல்லது. இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அனுபவமுள்ள முன்னோர்கள் சொன்னதை தற்போது வாழும் அனுபவம் உள்ளவர்கள் கேட்க வேண்டியதோ, அல்லது ஏற்றுக்கொள்ள வேண்டியதோ இல்லை. காரணம்…
-
பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம்
பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான்.தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடியும் என்று எண்ணி அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதும் காட்டு மிராண்டி செயல், தீவிர வாதிகளுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதன் மூலம், அரசும், தீவிரவாதிகளை போல் தொடர்ந்து கொலை குற்றத்தை செய்கின்றது என்று தான் பொருள் பாகிஸ்தானில் அமைதி திரும்பினால் நம் நாட்டுக்குதான் நல்லது. எனவே நான் எழுதிய “தூக்கு தண்டனையும்,…
