அறிவுரை
-
நம்மை செதுக்கும் சிற்பிகள்
நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள்.வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவதும், நம்அறிவாலும், உணர்வாலும் நாம் தேர்வு செய்யும் நண்பர்களால்தான்.
-
வெற்றிடம்
புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்த இடத்தை நிரப்ப துடிக்கும் பதவி வெறியர்களால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும். வெற்றிடத்தை நிரப்ப நினைப்பவர்கள் நிச்சயம் அவர்களை போல் தான் இவர்களும் இருப்பார்கள். ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களைப் போல் தான் இருப்பார்கள்.மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால்,…
-
தாயா ! தாரமா !!
திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும் அது அவர்களுடைய கருத்தாகதான் உள்ளதே தவிர, அதற்கான தெளிவு இல்லை. அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. முக்காலத்தையும் உணர்ந்தவன் இந்த உலகில் யாரும் இல்லை, ஆனால் முக்காலத்திலும் வாழ்பவன் தான் மனிதன். விலங்குகள் நிகழ்காலத்தில்மட்டும் தான் வாழ்கின்றன, ஆனால் மனிதன் இறந்த…
-
ரகசியம் நம்மை அன்னியப்படுத்திவிடும்
தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள்…
-
மன்னிப்பு
தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது தன்னை உயர்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பு. தான் செய்த தவற்றிர்க்கும், குற்றத்திற்கும், பாவத்திற்கு மான விடுதலையே பாவமன்னிப்பு. தன்னுடைய தவற்றை உளமார உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்டால் இறைவன் மன்னிப்பார் என்பது நம்பிக்கை. இது உண்மைதான் தவறு செய்யாதவன் மனிதனாக…
-
அன்பே அழகு
குழந்தைகளை பார்த்தால் சிலர் குழந்தைகளாகவேமாறி அவர்களிடம் விளையாடுவார்கள், இதனால் குழந்தைகள் அவர்களிடம் மிகவும் அன்பாக இருக்கும்.அந்த ஒரு சிலரில் நானும் ஒருவன். குழந்தைகளுடைய கள்ளமில்லா முகம் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவே நான் குழந்தைகளை வேற்றுமை பாராமல் கட்டித் தழுவிக்கொள்வேன், பதிலுக்கு குழந்தைகளும் என் மீது அன்பு கொண்டு முகத்தோடு முகம் வைத்து அணைத்துக் கொள்ளும் போது என்னையே நான் மறந்துவிடுவேன், குழந்தைகள் தெய்வத்துக்கு மேலானவர்கள், அவர்களின் முகத்தை பார்த்தால் துன்பம் அனைத்தும் பறந்தோடிவிடும். குழந்தைகளிடம் நாம்…
-
திருமண வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற்கான தீர்வை பதிவு செய்து உள்ளேன். நாம் பெற்ற அறிவு தான் நம் வாழ்க்கைக்கு சூனியம், நாம் பெற்ற அறிவே நம்மை உணர்வுபூர்வமாக வாழ விடாமல் தடுக்கின்றது. சிறு வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் (18 வயது முதல் 25 வயதிற்குள்)இருமணம் கலந்து அன்போடும்,…
-
உங்களுக்கு வாக்குரிமை உள்ளதா ?
நம் நாட்டில் வாக்குரிமை உள்ளவர்கள் 20 % சதவிகிதத்தினர் மட்டும்தான், மீதமுள்ள 80 %சதவிகிதத்தினர் வாக்குரிமை இருந்தும், இல்லாதவர்களே. ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி இருக்கின்றது என்று சொல்கின்றார்களே !அதன் உள் பொருள் அந்த வங்கியில் உள்ளவர்கள் அவர்களுடைய வாக்குரிமையை அடகு வைத்துள்ளார்கள் என்று பொருள்.அவர்களின் கட்சிகள் தொடர்ந்து தவறுகளை செய்தாலும், இவர்களும் தொடர்ந்து அதற்கேதான் அவர்களின் வாக்கை போடுவார்கள் என்பது உறுதி. வாக்குரிமையை இழந்து நிற்கும் கட்சி உறுப்பினர்களே, பொறுப்பாளர்களே, சிந்தியுங்கள் !உங்கள் வாக்குரிமையை பயன்படுத்துங்கள்…
-
போட்டி
பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!போட்டி நம் நிம்மதியை கெடுக்கும் !போட்டியும், பொறாமையும், ஆறாவது அறிவால் மனிதன் பெற்ற சாபம். சாலையில் சம்மந்தமே இல்லாதவர்களுடன் போட்டி போட்டு விபத்தை ஏற்படுத்துவதுபோல், வாழ்க்கையில் சம்பந்தமில்லாமல் பலருடன் போட்டிபோட்டு பலர் வாழ்க்கையை போட்டியில் தொலைத்துவிடுகிறார்கள். போராடுவோம் !வெற்றி பெறுவோம்!போட்டியை தவிர்ப்போம்!
