பகுத்தறிவு_விமர்சனம்

  • பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1)

    இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்டுகளுக்கு முன் பல நீதிக் கதைகளைச் சொல்லி நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால் நன்மையே நடக்கும். நேர்மை தவறினால் கேடு தான் விளையும் என்று நம்ப வைத்தார்கள். சிறுவயதிலேயே மாணவர்கள் மனதில் நேர்மை விதைக்கப்பட்டதால் பெரும்பாலானவர்கள் ஒழுக்கமானவரகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தார்கள். காலப்போக்கில் நீதி கதைகளை மாணவர்களுக்கு சொல்ல ஆசிரியர்கள் தவறிவிட்டார்கள்…

  • கற்பு

    கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அனுபவம் இல்லை என்ற அறியாமையே கற்பு ஆகும். ஒருவர் கற்போடு வாழ்வதால் இந்த உலகத்திற்கு பெரிய பயன் ஏதும் இல்லை, ஆனால் தன் வாழ்க்கைத் துணையுடன் கற்போடு வாழ்கின்றவர்களால் மட்டும்தான் நிறைவான இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியும், கற்பு என்பது…

  • கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்…

    கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள் இல்லை என்பதை புரிய வைக்க அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நான் எழுதிய விதி உண்மை என்ற ஆய்வுக்கட்டுரை மட்டுமே உள்ளது. இதை ஆத்திகமும், நாத்திகமும் புரியாதது போல் தவிர்க்கின்றது. விதி உண்மை என்ற அறிவியல் உண்மையை ஏற்காமல் (புரிந்துகொள்ளலாம்)…

  • சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள்

    சாதி கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு நினைப்பது போல் மத கலப்பு இல்லாமல் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மதசார்பு இல்லா தமிழக அரசு விரும்பினால் பலரின் பெயர்களை புதிதாக வைக்க வேண்டி இருக்குமே,எந்தப் பெயர் யாருக்கு என்று புரிந்து கொள்வதில் பெரிய குழப்பமாகிவிடுமே!இறந்தகால நிகழ்வுகளை மாற்றமுடியாது என்று பகுத்தறிவாளர்களுக்கு தெரியாதா?உள்ளதை உள்ளபடியே மாணவர்களுக்கு சொள்வதுதான் சரியான கல்வி.

  • காரணமும்,காரியமும்

    காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்கையையே புரிந்ததாக, அறிவாக எண்ணி ஏமாறுகிறோம். இதுதான் இன்றைய சமுதாய அறிவு. விதியைப் பற்றிய என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்லும் போதுதான் தெரிகின்றது என்னை சுற்றி உள்ளவர்களில் ஆயிரத்தில் 999பேர் நம்பிக்கை என்ற குப்பையால் சிந்திக்க முடியாமல், புரிதல் இல்லாமல், நம்பிக்கையையே புரிதலாக எண்ணி தன்னையே ஏமாற்றிக்…

  • பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடித்தது சரியா?

    பெரியாரின் முற்போக்குச் சிந்தனையில் மாறுபட்ட கருத்துக்கள் எனக்கு இருந்தாலும், சமூகப் போராளியாக பெரியார் இருந்ததால் அவருடைய பல கொள்கைகளுக்கு நான் உடன்படுகிறேன். ராமர் படத்தை செருப்பால் அடித்ததன் நோக்கம், இந்து கடவுளை சிறுமைப்படுத்த அல்ல, இந்து கடவுளின் பெயரால் உழைக்கும் இந்து மக்களை அடிமைப்படுத்தி இருந்த உயர் சாதி இந்துக்களுக்கு எதிரான போராட்டம். ராமர் படத்தை அன்று பெரியார் செருப்பால் அடிக்க வில்லை என்றால் நாம் இன்று கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் சமத்துவத்தை பெற்றிருக்க மாட்டோம்.…

  • தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்

    உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…

  • கடவுள் நம்பிக்கை

    நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை. கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணராமையின் வெளிப்பாடு.கடவுள் நம்பிக்கையால் ஒருவர் பெறக் கூடிய பலனை உணராமல் கடவுள் இல்லை என்பது அறியாமை. கடவுளைப்பற்றி ஆத்திகர்களும், நாத்திகர்களும், பேசிக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு மிகவும் நகைச்சுவையாக தெரிகின்றது. கடவுள் நம்பிக்கை என்பது கைத்தடியை போன்றது, அதை பிடுங்குவது பாவம். கைத்தடியை பயன்படுத்துபவர்கள் தானாகவே…

  • பெரியாரின் பகுத்தறியாமை

    யார் சொல்லியிருந்தாலும்,எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. —-பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரிந்து கொண்டவர்கள் பெரியாரையும் சேர்த்து இந்த உலகில் யாருமில்லை. ஒன்றை ஓருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதை சார்ந்த அறிவு அவரிடம் இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எதை ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாது. கற்றது கையளவு, கல்லாதது உலகளவு, என்றால் ஒருவர் எப்படி அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும். மருத்துவர் சொல்வதை…

  • புதிய பெரியாரியம்

    பெரியாரின் கொள்கையை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை அறிவாளியாக காட்டிக் கொள்வதற்க்காகவே அந்த இயக்கத்தில் இனைகின்றார்கள். ஆத்திகத்தை பின்பற்றும் பெரும்பாலானவர்கள் தன்னை நேர்மையானவர் என்று மற்றவர்கள் நம்பவேண்டும் என்பதற்காகவே நெற்றியில் பட்டை அடித்து கொள்கின்றார்கள்.பெரியார் சொன்னது போல் பகுத்தரிவு என்பது முன்னோர்கள் சொன்னதை அப்படியே கேட்பது அல்ல.100 ஆண்டுகளுக்கு முன் பெரியார் சொன்ன கொள்கையை இன்று நாம் ஆய்வு செய்யாமல் ஏற்பது பகுத்தறிவு அல்ல.உன்மையான பகுத்தறிவாளன் இன்று பெரியார் கருத்தை அப்படியே ஏற்க மாட்டான்!புதிய மேன்மையான நாத்திகத்தையும், பகுத்தறிவையும்…