BJP
-
மும்மொழி கொள்கையை எதிர்ப்பது ஆரோக்கியமான செயலா ?
உடல்வலிமை, அறிவு, பொருள், போன்ற அனைத்து செல்வத்தையும் பெற்றுஇருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியத்தை செயலின் மூலம் ஒருவன் வெளிப்படுத்த முடியும். ஒருவனுடைய செயலே அவனுடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். ஆரோக்கியம் இல்லாதவர்களால் போராடவோ, புரட்சி செய்யவோ,முடியாது என்பது இயல்பு. நம்மில் பல நண்பர்கள் மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்றால் அதன் பொருள் அவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதின் வெளிப்பாடே. எனவே அவர்கள் அவர்களின் உடலையும், அறிவையும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவர்களுக்கு நல்லது. இந்தியா முழுவதற்கும் ஒரே…
-
தாய்மொழி நம் பிறப்புரிமை
இந்தியா பல நாடுகளின் கூட்டமைப்பு,ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தாய்மொழிகள் உள்ளன, அதனால் தான் இந்தியாவுக்கு என்று எந்த மொழியும் தேசிய மொழியாக இல்லை. இந்தி தேசிய மொழிஅல்ல.இந்தியா ஒரு கூட்டமைப்பு நாடு என்பதால், எந்த ஒரு மாநில மொழியும், கலாச்சாரமும், மற்றொரு மாநிலத்தி ன்மீது திணிக்கக் கூடாது என்பது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆன அடிப்படை உரிமை.மீறினால் ஐநா தலையிடுவதற்கு உரிமை உள்ளது இதைப் பொருட்படுத்தாத…
-
அரசியல் விழிப்புணர்வு
யார் நாட்டை ஆண்டால் எனக்கென்ன ? இன்று நான் உழைத்தால்தான் சாப்பாடு என்று அலுப்போடு சொல்லும் அடிதட்டு உழைப்பாளி முதல், அரசியலை முழுமையாக கரைத்து குடித்து விட்டு இந்த நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் வரை, அனைவருக்குமான விழிப்புணர்வு கட்டுரை இது. நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்காக இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியது என்னுடைய கடமையாக எண்ணி எழுதி உள்ளேன். எனவே வாசகர்கள் படித்ததும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், காரணம் நாம் நல்லவராக இருப்பதை காட்டிலும்…
-
நாட்டுப்பற்று
அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…
-
வருமுன் காப்போம்
பெரும்பான்மையினர் நாட்டை ஆள்வது ஜனநாயகம் அல்ல.பெரும்பாலானவர்கள் நாட்டை ஆள்வதுதான் உன்மையான ஜனநாயகம். பி ஜே பி யின் பிரிவினை அரசியல் ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் போதுதான் தீவிரவாத சிந்தனை தலைதூக்கும் என்பது உலக வரலாறு. தீவிரவாதத்தின் முன்பு ஜனநாயகம் தோற்கும் போது அனைவரும் போர்களத்தில் சாக வேண்டியது தான். போர்க்களத்தில் ஜனநாயகம் பேச முடியாது, எனவே காலம் தாழ்த்தாமல் அமைதியான நம் ஜனநாயக நாடு தீவிரவாத நாடாக மாறுவதற்கு முன், பி ஜே…
-
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு.மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது.நம் வீட்டு முன்னோர்களை நாம் ஆய்வு செய்து பேசும் போது, பக்கத்து வீட்டு முன்னோர்களைப் பற்றி நீ ஏன் பேசமறுகின்றாய் என்று கேட்பது அறிவுள்ள செயலா?.தெரிந்தே தெருச் சண்டையை உண்டாக்கும் சூழ்ச்சி அல்லவா அது.எனவே மாற்று மதக் கடவுள்களை தமிழர்கள் விமர்சிப்பதில்லை,அதனால்தான் தமிழகம் மதக் கலவரம் இல்லா நாடாக உள்ளது.வடநாட்டைப்போல்…
-
சூழ்ச்சி
திறமையால் தான் வெல்ல முடியும்,சூழ்ச்சியால் வீழ்த்ததான் முடியும், வெல்லமுடியாது. திறமையால் பெறுகின்ற வெற்றிக்கும் சூழ்ச்சியால் பெறுகின்ற வெற்றிக்கும் வேறுபாடு உண்டு.திறமை வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.சூழ்ச்சி எதிரிக்கு தோல்வியைக் கொடுக்கும்.வேகமாக ஓடியதால் வெற்றி பெறுவது என்பது திறமை.மற்றவர்களை வேகமாக ஒடாமல் செய்து வெற்றி பெறுவது என்பது சூழ்ச்சி. நாம் ஆன்மிகத்தை துன்பத்தின் வடிகாலாக பார்க்கின்றோம்,ஆனால்BJPயும்,பிராமணர்களும், வருமானத்திற்கான வழியாகப் பார்க்கின்றார்கள்.அதனால் தான் அவர்கள் ஆன்மீகத்தை அரசியல் ஆக்குகின்றார்கள்.BJP வடமாநிலத்தில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் சூழ்ச்சியால் பெற்றவையே. தமிழ்நாட்டில் சூழ்ச்சிக்கு நாம்…
-
முத்தலாக் தடை சட்டம்
இஸ்லாமிய ஆணோ,பெண்ணோ, மூன்று முறை தலாக் என்று சொன்னால்,அவர்களுடைய மணவாழ்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பொருள் இது அவர்களுடைய கலாச்சாரம். இது பெண் கொடுமையா ?புதிய சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? இஸ்லாமிய தம்பதிகள் இனி சேர்ந்து வாழ்வார்களா? இதுதான் நம் கேள்வி. இந்து மதக் கலாச்சாரப்படி ஒரு ஆண் ஒரு பெண் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி விட்டால் போதும்,அன்று முதல் அவள் அவனின் மனைவி.இது எப்படி! யார் வேண்டுமானாலும் யார்கழுத்திலும் கயிறை கட்டிவிட்டால்…
