தொடர்வினை_தத்துவம்
-
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அறிவு இல்லாத சிறுவயதில் கடவுளை நம்பினேன், வளர்ந்து அறிவைப் பெற்ற பிறகு கடவுள் இல்லை என்பதை என் அறிவு பெற்றதால், கடவுள் செய்கின்ற செயலை அறிவியல் செய்கின்றது என்பதையும், அனைத்து வினைக்கும் எதிர்வினை நிச்சயம் உண்டு என்பதையும் புரிந்து கொண்டதால் வளர்ந்த பிறகும் எந்த தவறையும்…
-
தூக்குத் தண்டனை சரியா?
நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியே அந்த சமுதாயத்தின் நீதியை மாற்றும். சாலை விபத்தால் உலகில் பல கோடி அப்பாவி மக்கள் இறக்கின்றார்கள் இதற்கு 90 சதவிகிதம் ஓட்டுனரின் தவறே காரணம், ஆனால் சட்டம் இந்த நிகழ்வை விபத்து என்றே பார்க்கின்றது. அதுபோல் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே பல நோயாளிகள் இறப்பதற்கு காரணமாக உள்ளது…
-
ஆன்மீகம் ஓர் தொழில்
ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக செய்துவருகின்றார்கள். விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆன்மீக தொழிலில்தான் அதிகமானோர் சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் பலர் பயன்பெறுகின்றார்கள், ஆன்மீகம் ஓர் தொழில் என்பதால் அவர்களுடைய வாடிக்கையாளர்களை இழக்க கூடாது என்பதற்கு மக்களிடம் மூடநம்பிக்கையையும், மதப்பிரிவினையையும் ஏற்படுத்துகின்றார்கள்.என்னுடைய ஆய்வும் ஊடகத்தால் மறைக்கப்படுகின்றது. மது பிரியர்களை போதையின்…
-
நம் மனசாட்சி மாறவேண்டும்
ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…
-
விதியை நம்பாதீர்கள் !
விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொண்டவர்களுக்கு புரிய வைப்பதும் கடினம், நம்ப வைப்பதும் கடினம். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரம், இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரம் என்ற தொடர்வினை தத்துவம் தான் விதி. விதி உண்மை என்று புரிந்துகொள்வதற்கும், விதியை நம்புவதற்கும் வித்தியாசமுண்டு. விதி உண்மை என்று நான்…
-
வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
” வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு ” வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்டால் அவருக்கு 1,00,00,000 ரூபாய் பரிசாக குமார் பதிப்பகம் கொடுக்கும்.
-
தந்தை பெரியாரின் திராவிட கழக வளர்ச்சியும், வீழ்ச்சியும்
உயிரினங்களாக இருந்தாலும் அல்லது கொள்கை சார்ந்த இயக்கமாக இருந்தாலும் காலத்தின் சூழலுக்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடையவில்லை என்றால் அது அழிந்துவிடும் என்பது இயற்கையின் விதி. இதற்கு கட்டுப்பட்டு தான் உலகில் அனைத்தும் இயங்குகின்றது. 70 ஆண்டுகளுக்கு முன் திராவிட கழகம் வளர்ச்சி அடையும்போது படித்தவர்களும். கடவுள் மறுப்பாளர்களும் அதிகம் இருந்ததால்தான் தி க வின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் தற்போது பகுத்தறிவு இல்லாதவர்களும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் அதிகமாக இருப்பதால்தான் திராவிட கழகம் மக்களிடம் செல்வாக்கை…
-
தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல
தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க முடியும். ஆன்மீகத்தால் மட்டுமே நீதியையும், நேர்மையையும், ஒழுக்கத்தையும், சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும், மத நல்லிணக்கத்தையும்,உலகில் ஏற்படுத்த முடியும்.
-
நின்னை சரணடைந்தேன்…
பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…
-
நாட்டுப்பற்று
அண்டை நாட்டுடன் போரிட்டால் நாட்டுப்பற்று ஏற்படும்! மாற்று மதத்தினரிடம் மத தீவிரவாதத்தை தூண்டினால் மத ஒற்றுமை ஏற்படும்! மாற்று சாதியினரிடம் சாதிவெறியை தூண்டினால் சாதி ஒற்றுமை ஏற்படும்! இது மனிதனின் இயல்பு. இந்த மூன்றையும் பயன்படுத்தி தான் பி ஜே பி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. இது சிறிது காலத்திற்கு இன்பமாக இருக்கும் இதன் தொடர்ச்சி, தொடர்வினை, ஒட்டுமொத்த வட இந்தியாவையே அழித்துவிடும் என்பது விதி.வினையை விதைத்தவன் வினை யையே அறுவடை செய்வான். தென்னிந்தியாவை சேர்ந்த…
