Justice
-
நம் மனசாட்சி மாறவேண்டும்
ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு.அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை.நீதி மாறவேண்டும் என்றால் சமுதாயத்தின் அறிவு மாறவேண்டும்.குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற அறிவியல் உண்மையை எப்போது இந்த உலகம் உணர்கின்றதோ அப்போதுதான் தூக்குத்தண்டனை தடை செய்யப்படும். இதை நான் எழுதுவதால் இந்த உலகில் நான் மட்டுமே அறிவாளி, மற்றவர்கள் அனைவரும் அறிவு இல்லாதவர்கள் என்று பொருளல்ல. அறிவால் யாரும்,…
-
வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
” வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு ” வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்டால் அவருக்கு 1,00,00,000 ரூபாய் பரிசாக குமார் பதிப்பகம் கொடுக்கும்.
-
உணர்வின் பிறப்பு
நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெறுகிறோம், அதைத் தொடர்ந்து நான் என்ற உணர்வை பெறுகிறோம் இந்த நான் என்ற உணர்வை பெற்ற பிறகுதான் போட்டி, போறாமை, பாசம், நட்பு, அன்பு, வெறுப்பு, போன்ற பல உணர்வுகளை பெறுகின்றோம். கடைசியாக காம உணர்வை பெறுகிறோம். வயது முதிர்ச்சியில்…
-
தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி.சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் பொருளாதாரம், அதிகாரம், கல்வி, இனம், மொழி, மதம், அனைத்திலும் இருக்க வேண்டும். தான் உயர்ந்தவன் என்று எவன் ஒருவனும் எதிலும் நினைக்கக் கூடாது.இதற்கு பெயர் தான் உண்மையான சமத்துவம் அதற்கான விதைத்தான் என்னுடைய ஆய்வு, இந்த ஆய்வின் முடிவை புத்தகமாக எழுதி ஊடகங்களுக்கும் பல பெரிய மனிதர்களுக்கும் அனுப்பி…
-
எச்சரிக்கை மணி
திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை…
-
பேரறிவாளனின் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல்
பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், இன்று ஹாசினியின் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை அறிவற்ற செயல் என்று எதிர்க்கின்றேன்.இதையும் புரிந்து கொள்ளாமல் என்னை முட்டாள் என்று என்னும் வாசகர்களே நான் பெற்ற புதிய அறிவை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள். ”உன் செயலுக்கு நீ காரணம்…
-
சங்கர் கொலை வழக்கு
சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட்டு நிம்மதி இழந்த ஒருவர் இவனை கொலை செய்தால்தான் இதுபோன்ற தவறை வேறு ஒருவன் இந்த சமுதாயத்தில் இனி செய்யமாட்டான் என்று எண்ணி கொலை செய்ததில் என்ன தவறு உள்ளது. மக்களிடம் சமத்துவம் மலர கொலையோ, தூக்குத் தண்டனையோ, தீர்வு அல்ல.அதற்குத் தீர்வு நீதித்துறை…
-
சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடியவில்லை இறந்த காலத்தின் நிகழ்வுகள்தான் ஒருவனுடைய இன்றைய செயலை தீர்மானிக்கின்றன என்பதை சமுதாயம் அறிவியல் பூர்வமாக உணர்ந்த பின் குற்றவாளியின் செயலுக்கு தண்டனை கொடுப்பது சரியா? சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
