அறிவின்_தோற்றம்

  • முன்பிறவி கர்மா உண்மையா?

    ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற்றி பேசுவதற்கும்,அறிவைப் பற்றி பேசுவதற்கும் தகுதி இல்லாதவர்கள். ஆத்திகனும்,நாத்திகனும் தன்னுடைய நம்பிக்கையை அறிவின் புரிதலாக நினைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை நான் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது இரண்டு முட்டாள்களும் தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு உணர்வின் ஆளுமையால் ஆறாவது அறிவைப் பெற முடியாமல் மிருகமாக…

  • அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்…

    அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் நாம் அவர்களிடம் பழகலாம். அறிவின் அளவுகோல் தேவைப்படுகின்றவர்கள் விருப்பத்தை தெரிவித்தால் கொடுக்கின்றேன்.

  • மதியால் விதியை வெல்ல முடியாது!

    விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும் மதியால் விதியை வெல்லலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம். அறியாமைக்கும், முட்டாள்தனத்திற்கும் வேற்றுமை உண்டு கண்ணால் பார்க்க முடியாததை பார்க்காமல் இருப்பது அறியாமை,கண்ணருகில் காண்பித்தும் பார்க்க முடியவில்லை என்றால் அது முட்டாள்தனம். என்னுடைய ஆய்வை வெளி உலகத்திற்கு செல்ல விடாமல்…

  • கதை கேளு! கதை கேளு!

    போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம் கட்டுப்பாட்டில் இல்லை இறந்த காலத்தின் தொடர்போடுதான் இருக்கின்றது, இதிலிருந்து விடுபட்டு சுயமாக, சுதந்திரமாக யார் ஒருவராலும் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது “என்ற இந்த நான்கு வரிகள் புரிந்தால் தான் நான் எழுதிய “குமார்விதிகள்” என்ற புத்தகத்தின் நாற்பது பக்கங்களும் புரியும். தங்க நாணயம் தரையில் கிடப்பதை பார்த்த நான்…

  • அறைக்கூவல்

    குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத்துக்களை எனக்கு தெரிவிக்கவில்லை, கருத்தை தெரிவிக்க தயங்குகிறார்கள். காரணம் நான் எழுதிய புத்தகம் என்னுடைய அறிவை வெளிப்படுத்துவது போல், நான் எழுதிய புத்தகத்தை படித்துவிட்டு என்னுடைய புத்தகத்தை விமர்சித்தால் அவர்களுடைய அறிவு வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சமே. பகுத்தறிவாளர்கள், முற்போக்கு வாதிகள், நாத்திகர்கள், ஆன்மீகவாதிகள், மதத்தலைவர்கள், எழுத்தாளர்கள்,கல்வியாளர்கள்…

  • யார் கண் பார்வை இல்லாதவர்?

    சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில், சருகுக்கு அடியில் கிடக்கும் தங்க நாணயத்தை பார்க்காமல் பல ஆயிரம் பேர் சாலையைக் கடந்து செல்வதால் அனைவருக்கும் கண் பார்வை இல்லை என்று பொருள் அல்ல. மரத்தடியில் கிடந்த தங்க நாணயத்தை காட்டிய பிறகும் தெரியவில்லை என்றால் தான் கண் பார்வை இல்லாதவர் என்று பொருள். ஒவ்வொரு மனிதன் பெரும் அறிவும் தற்செயலானவையே !அந்த அடிப்படையில் நானும் “என்னுடைய சிந்தனை எனக்கு கட்டுப்பட்டு இல்லை, இறந்த காலத்தின் தொடர்போடு தான் என்னுடைய…

  • தகுதி உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பேன்

    என்னுடைய மகளும், மகனும் எனக்கு கொடுத்த உற்சாகத்தின் காரணமாகவும்,என்னுடைய மனைவியின் ஆதரவின் காரணமாகவும்,புத்தகம் எழுதுவதால் எந்த பயனும் இந்த சமுதாயத்திற்கு இல்லை என்ற விரக்தியில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு மீண்டும் ஒரு முயற்சியாக “குமார் விதிகள் “ என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றேன். தமிழில் நான் எழுதியதை ஆங்கிலத்தில் என்னுடைய மகள் மொழிபெயர்த்து “Kumar laws”என்ற புத்தகத்தை எழுதி இருக்கின்றார்கள். உடலை ஆளுமை செய்ய யோகா எப்படி உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அவசியமோ, அது…

  • சர்வதேச புத்தக தினம்

    “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை அறிவாக பெறுவதற்கு வாசகர்களிடம் அறிவு (அனுபவம்)இல்லை. அறிவு என்பது அனுபவத்தால் பெறுவது மட்டுமே. கண்ணால் பார்த்து படித்து ஒரு தகவலை பெறுவதற்கும், காதால் கேட்டு ஒரு தகவலை பெறுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை, இரண்டும் ஒன்றுதான். பழங்காலத்தில் குரலை பதிவு செய்யக்கூடிய…

  • அறியாமையே இன்பத்தை கொடுக்கும் !

    அறிவைப் பற்றிய புரிதல் இல்லாமல் யாரும் “அறியாமையே இன்பத்தை கொடுக்கும் “என்ற வாக்கியத்தை புரிந்து கொள்ள முடியாது. நான் எழுதிய” புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை படித்த பிறகு இந்த வாக்கியத்தை படித்தால் மட்டுமே புரியும். அறிவைப் பற்றிய புரிதல் இருந்தால் மட்டுமே கெட்ட அறிவை தவிர்த்து நல்ல அறிவை மட்டும் பெற முடியும். அறிவில் நல்லறிவு, கெட்டறிவு என்று இரண்டு அறிவு இருக்கா என்று பலருக்கும் வியப்பாக இருக்கும். அறிவைப் பற்றிய புரிதல்…

  • உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா

    உனக்கு அறிவு இருக்கா?-இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது, இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள். “உனக்கு அறிவு இருக்கா?” என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை. நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை, அறிவைப் பற்றி ஆய்வு செய்து…