அரசுமொழி_அந்தஸ்து
-
ஜனநாயகப் பண்பு
ஜனநாயகத்தில் அனைவரின் கருத்தையும் ஏற்றுக் கொள்வதுதான் ஜனநாயகம். எனக்கு சரி என்று தோன்றுவது மற்றவர்களுக்கு தவறாக தோன்றும், அதனால் அவரை இழிவாகப் பேசுவது நற்பண்பு அல்ல. இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை சிறந்த பிரதமர் என்று புகழ்ந்து இருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும் அது அவருடைய கருத்து, அதை ஏற்பதும் ஏற்காததும் என்னுடைய விருப்பம். ஜனநாயகத்தில் எனக்கும் ஒரு வாக்கு தான், அவருக்கும் ஒரு வாக்கு தான். பிரதமரை ஆதரிப்பது அவருடைய உரிமை என்றால் எதிர்ப்பது…
-
மொழி சுதந்திரப் போராட்டம்
அன்று நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இன்று நடக்கும் மொழி சுதந்திர போராட்டத்திற்கும் வேற்றுமை உண்டு. அன்று இந்தி மொழியை வேண்டாம் என்று தமிழகம் மட்டும் தனிமையாக போராடியதால் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இன்று, இந்தியைப் போல் 22 மாநில மொழிகளுக்கும் சமமான அங்கீகாரம் வேண்டும் என்று அனைத்து மாநிலத்தையும் ஒன்றுதிரட்டி போராடுவதால் நிச்சயம் இந்த முறை நமக்கு மொழி சுதந்திரம் கிடைத்து விடும். அரசியல் சுயநலமில்லாமல் ஒன்றிணைவோம் !போராடுவோம் !!வெற்றி பெறுவோம் !!!
-
வாழ்க புரட்சிக் கவி பாரதியின் புரட்சி
“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை !அச்சமில்லை !அச்சமென்பதில்லையே !!“ என்று வீர முழக்கத்தை நமக்கு அறிவாக கொடுத்துச் சென்ற புரட்சிக்கவி பாரதி நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதற்கு காரணம் இன்றளவும் அவருடைய புரட்சி இந்த தமிழ் சமுதாயத்திற்கு தேவைப்படுவதாலேயே! பாரதி கவிதை மட்டும் எழுதி இருந்தால் அவர் மறைந்தபொழுதிலேயே மக்கள் பாரதியை மறந்திருப்பார்கள், ஆனால் பாரதி பெண் விடுதலைக்காகவும், சாதி சமத்துவத்திற்காகவும், தமிழ் மொழிக்காகவும் களத்தில் இறங்கி சமரசமில்லாமல் புரட்சி செய்ததாலேயே…
-
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது?
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் வருத்தப்படுகின்றது? ஆடு மீது உள்ள அக்கறையால் அல்ல !அதை கொன்று சாப்பிடுவதற்காகவே என்பதை போல், தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாக இல்லாதவர்கள் தமிழர்களைப் போல் தமிழில் பேசினாலும் அவர்களில் பலர் தமிழை அழிப்பதற்காகவே இந்தி மொழிக்கு ஆதரவாக பேசுகின்றார்கள் என்பதை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநிலங்களுக்கு ஒரு மொழி தாய் மொழியாக இருப்பதால் அனைத்து மாநில மக்களும் மற்ற மாநில மக்களுடன்…
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் ஆளுமைமிக்க முதல்வராக ஸ்டாலின் வெற்றி வாகை சூடி இருப்பதற்கு வாழ்த்துக்கள். உழைப்பும், நேர்மையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களே சான்று. ஜெயலலிதா அவர்கள் இறந்த உடனேயே குறுக்கு வழியில் ஸ்டாலின் முயற்சி செய்திருந்தால் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை அனுபவித்திருக்கலாம், ஆனால் அவர் அதற்கு ஆசைப்படாமல் நேர்மையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக தான் பதவியேற்பேன் என்று சொன்னது அவருடைய நேர்மைக்குச்…
-
தேர்தல் முறை மாறவேண்டும்
தேர்தல் முறை மாறவேண்டும்!! இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்த பட்சம் 20% வாக்கை பெற்று மொத்த வாக்கில் அதிகம் பெற்ற கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டால் தான், ஒவ்வொரு மாநில கட்சிகளின் ஆதரவும் மத்திய அரசுக்கு தேவைப்படும், அப்போது வட இந்தியர்கள் மட்டும் தான் இந்தியர்கள் என்ற நிலை மாறி தென் மாநிலத்தவரும் இந்தியர் தான் என்ற நிலை உருவாகும். ஓவ்வொரு மாநில மொழிக்கும் தேசிய மொழி அங்கீகாரம் கிடைக்கும்.அனைத்து…
-
இந்தி தெரியாது போடா…
”இந்தி தெரியாது போடா “ “நான் தமிழ் பேசும் இந்தியன் “ என்ற வாசகத்தின் பொருள் இந்திக்கு நிகராக அனைத்து மாநில மொழிகளுக்கும் மொழி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற இருமொழிக் கொள்கையை வலிவுறுத்துகின்ற மொழிச் சுதந்திரப் போராட்டமே ஆகும். இதைப் புரிந்து கொள்ளாமல் போராடுபவர்களுக்கு இந்தி தெரிந்திருந்தால் அவர்கள் தாய் மொழிக்காக போராட தகுதி இல்லாதவர்கள் என்று கேலி செய்வது அறியாமையின் வெளிப்பாடே மற்றும் தாய்மொழி உணர்வை அரசியலுக்காக விற்கும் செயலே இது.
-
மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்
நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இல்லை என்றால் போராட்டம் இல்லை, போராட்டம் இல்லை என்றால் வெற்றி இல்லை, வெற்றி இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இந்த நாட்டை ஆள்பவர்களால் தான் மாற்ற முடியும் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு தனி மனிதனால் எப்படி முடியும் என்று நான் நினைத்து இருந்தால், “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி இருக்க மாட்டேன், முடியும் என்ற நம்பிக்கையே என்னை எழுத வைத்தது எழுதிய…
-
வாழ்க தமிழ் ! சரியான முழக்கமா ?
தமிழ் வாழ்க என்று சொல்லும் அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும், இதுவரை அதற்கான முயற்சியை செய்து இருக்கின்றார்களா என்று ஆராய்ந்தால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். நம்முடைய இலக்கு தமிழ் மொழியும், இந்தி மொழியைப்போல் தேசிய அலுவல் மொழிக்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பதுதான். இந்த அங்கீகாரம் நம் மொழிக்கு கிடைத்தால் மட்டுமே நம் மொழி நமக்கு பயனுள்ள மொழியாக இருக்கும். தற்போதுள்ள மொழிக் கொள்கையின் படி, இந்தியைத் தவிர அனைத்து மாநில மொழிகளும் பயனில்லாத மொழிகள்…
-
I am anti-Hindi fanatic
இந்தியாவில் பல மாநில மொழிகள் இருக்க, இந்தியை மட்டும் தேசிய அலுவல் மொழியாக வட இந்தியர்கள் அறிவித்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது. இது மற்ற மாநில மொழிகளுக்கும்,மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை. எதிரியே தீர்மானிக்கிறான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று, சாதியாலும், மதத்தாலும், மக்களை பிரித்து அவர்களை anti indian என்று சொல்லி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை கெடுத்து ஆட்சிக்கு வந்த பிஜேபி அரசு இன்று மொழியால் மாநிலங்களை பிரித்து, தேச ஒற்றுமையை…
