மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்


மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்பதையே அவருடைய பாடல் நமக்கு தெரியப்படுத்துகின்றது.
திருவாசகம் எழுதிய மாணிக்கவாசகருக்கே அறிவைப் பற்றிய புரிதல் இல்லாத போது, நாம் யாரை அறிவாளியாக பார்ப்பது ?. அதற்கான பதில் நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து எழுதிய “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தில் உள்ளது.

நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கு தெரியவில்லை, புரியவில்லை என்ற உடன் அவர்களை அறிவு இல்லாதவராக பார்க்கும் நாம், மற்றவர்களுக்கு தெரிந்தது நமக்கு தெரியவில்லை, புரியவில்லை என்றால் நமக்கு அறிவு இல்லை என்று எண்ணுவதற்கு மாறாக அவர்கள் சொல்வது தவறு என்று எண்ணுவதே இயல்பு.

அறிவைப் பற்றி என்னுடைய ஆய்வு புத்தகத்தில் இருந்து சில துளிகள்.

1) அனுபவம்தான் அறிவு,
2) படிப்பறிவு என்ற ஒன்று இல்லவே இல்லை,
3) ஒருவர் பெற்ற அறிவை வேறு ஒருவருக்கு அறிவாக கொடுக்க முடியாது, தகவலாக மட்டுமே கொடுக்க முடியும்,
4) அறிவு இல்லாமல் அறிவைப் புரிந்து கொள்ள முடியாது,
5) ஆணும், பெண்ணும், அறிவால் இருவேறு உலகம், எந்த ஒரு மொழியாலும் அவர்களின் அறிவை பகிர்ந்து கொள்ள முடியாது,
6) பாலில் சிறிது தயிரை சேர்த்தால் பால் தயிராக மாறுவது போல், ஒருவர் படிக்கும் தகவலோடு அவரின் அனுபவத்தை சேர்த்தால் மட்டுமே அது அறிவாக மாறும். அனுபவம் இல்லாமல் புத்தகம் படிப்பதால் அறிவு வளராது.
7) அறிவால் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை, அறிவால் அனைவரும் சமம்,
😎 அறிவாளி என்று யாரும் இல்லை, அறிவு இல்லாதவர் என்றும் யாருமில்லை,
9) மனசாட்சி தனி மனிதனின் அறிவு,
10) நீதி சமுதாயத்தின் அறிவு,
11) அறிவு படிப்பை அடிப்படையாக கொண்டது அல்ல,
12)அறிவை அறிவால் ஆளுமை செய்வதுதான் “ஏழாவது அறிவு”,
13) நாம் எதைப் பார்க்கின்றோமோ, எதை கேட்கின்றோம், எதை உணர்கின்றோமோ, அது நம்மை, நம் அனுமதி இல்லாமலேயே ஆள ஆரம்பித்துவிடும்,
14) ஐந்து புலன்களால் உணர்வது மட்டுமே அறிவு.

அறிவு இல்லாமல் அறிவை புரிந்து கொள்ள முடியாது என்ற என்னுடைய ஆய்வின் முடிவை மெய்ப்பிக்கும் வகையில், ஊமை கனவு கண்டதுபோல், செவிடன் காதில் சங்கு ஊதியது போல், இந்தப் புத்தகத்தை நான் எழுதி ஏழு ஆண்டுகள் கடந்தும், அறிவைப் பற்றியப் புரிதலை, என்னால் இந்த சமுதாயத்தில் ஏற்படுத்த முடியவில்லை என்பதை எண்ணும்போது வேதனையாக உள்ளது.

Category: