நம்பிக்கையின்_பயன்

  • நின்னை சரணடைந்தேன்…

    பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை, காரணம் நான் வேறு ஒரு அறிவு உலகத்திலும், படிக்கின்றவர்கள் வேறு ஒரு அறிவு உலகத்திலும் இருப்பதுதான். உலகமக்கள் அனைவரையும் புதிய அறிவு உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் என்னுடைய எழுத்தின் நோக்கம். ஆன்மீகம் கடவுள் நம்பிக்கை என்ற ஆரம்ப நிலையிலிருந்து, புரிதல்…

  • அவநம்பிக்கை

    கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்து விடுகின்றது. கடவுள் இல்லை என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்பாததில் எந்தத் தவறும் இல்லை. அதுபோல் கடவுள் இருக்கு என்ற கருத்தை உடையவர்கள் கடவுளை நம்புவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் கடவுள் இருக்கு என்று நம்புவார்களில் பெரும்பாலானவர்கள் தான் வணங்கும் எந்த கடவுளையும் அவர்கள்…

  • கடவுள் நம்பிக்கை

    நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை. கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணராமையின் வெளிப்பாடு.கடவுள் நம்பிக்கையால் ஒருவர் பெறக் கூடிய பலனை உணராமல் கடவுள் இல்லை என்பது அறியாமை. கடவுளைப்பற்றி ஆத்திகர்களும், நாத்திகர்களும், பேசிக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு மிகவும் நகைச்சுவையாக தெரிகின்றது. கடவுள் நம்பிக்கை என்பது கைத்தடியை போன்றது, அதை பிடுங்குவது பாவம். கைத்தடியை பயன்படுத்துபவர்கள் தானாகவே…

  • ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா?

    கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன். கடவுள் இல்லை என்று என்னுடைய ஆய்வு உறுதி செய்த போதிலும், கடவுள் இல்லை என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொண்ட போதிலும், கடவுளை நான் தினமும் வணங்கிக் கொண்டு தான் உள்ளேன். காரணம், என்னை நான் ஒழுங்குபடுத்தி கொள்ளவே.…

  • மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர்

    மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்பது தான் உண்மை. எதையும் முயற்சிக்காமல் கடவுளையே நம்பியிருந்தால் மனித இனம் எப்பொழுதோ அழிந்திருக்கும். நம் உள் மனது கடவுளை நம்பி கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்வதால் தான் நாம் முயற்சிக்கின்றோம். நம் முன்னோர்கள் கடவுளை நம்பவில்லை என்பதற்கு…

  • கடவுள் நம்பிக்கையை புண்படுத்த கூடாதா?

    கடவுள் நம்பிக்கையை கடவுளை மறுப்பவர்கள் புண்படுத்த கூடாது என்று போராடும் நண்பர்களே,கடவுள் இல்லை என்று நம்பும் கடவுளை மறுப்பவர்களிடம் கடவுள் இருக்கு என்று சொல்லி நீங்கள் புண்படுத்துவதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கின்றீர்கள். காவடி எடுத்து, சாலையில் கோசம் போட்டு, நம் நம்பிக்கையை வெளிபடுத்த நமக்கு உரிமை இருக்கும்போது, அதே சாலையில் கடவுள் இல்லை என்று அவருடைய நம்பிக்கையை வெளிபடுத்துவதில் என்னகுற்றம் உள்ளது. கடவுள் மறுப்புதான் இந்த சமூதாயத்தின் சமத்துவத்துக்கு அடித்தளம் என்பது வரலாறு. அதுபோல் கடவுள் நம்பிக்கையும்…

  • கடவுள்

    கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு என்றும், கடவுளை பார்க்க முடியாது உணரத்தான் முடியும் என்பதும் முடிவிலா போராட்டமாக தான் உள்ளது அதற்கான முயற்சிதான் இந்த ஆய்வு. பல ஆயிரம் ஆண்டுகளாக பல கோடி மக்கள் கடவுள் இருக்கு என்று நம்புவதற்கு காரணம் அவர்கள் வேண்டிக் கொண்டதில் சில நடந்ததாலும், கடவுளை…