தீபாவளி அன்று நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கைபேசி மூலம் தீபாவளி வாழ்த்து தெரிவித்தேன், அதில் ஒரு நண்பரிடம் ஒரு மணி நேரம் பேசினேன், 40 ஆண்டுகால நட்பு, என்னை விட 10 வயது பெரியவர், என்எல்சி நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர், நான் அவரிடம் பேசியதும் அவர் சுமந்து இருந்த பாரம் அனைத்தையும் நான் இறக்கி வைத்து விட்டது போல் இருந்ததாக சொல்லி ஆனந்தப்பட்டார், நான் அவருக்கு பல லட்சங்கள் பணமாக கொடுத்திருந்தாலும் அவருக்கு அந்த ஆனந்தம் வந்திருக்காது, காரணம் அவர் பெரிய செல்வந்தர். அவரிடம் வாழ்க்கையைப் பற்றிய என்னுடைய புரிதலை நான் பகிர்ந்து கொண்டது அவருக்கு நான் செய்த பெரும் உதவியாக எண்ணி எனக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் மூலம் அதிகாரத்தில் இருந்தவர்கள், செல்வந்தர்கள், சாதனையாளர்கள் என்று நல்ல நிலையில் வாழ்ந்தவர்கள் பலர் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாமல் நான் என்ற உணர்வால் பொறியில் சிக்கிய சிங்கம் போல் துன்பத்தில் இருக்கின்றார்கள் என்பதை நான் உணர்ந்தேன்.
காட்டு ராஜா சிங்கம் போல் தன் துறையில் ஆளுமை மிக்கவர்கள் காலத்தின் மாற்றத்தால் அவர்களின் ஆளுமையை இழந்தபிறகு வாழ்வதற்கு தேவையான அனைத்து செல்வங்களும் இருந்தும் நான் என்ற உணர்வின் மிகையால் பொறியில் மாட்டிய சிங்கம்போல் நான் என்ற உணர்வில் மாட்டிக் கொண்டு துன்பப்படுபவர்கள் பலர். அவர்களுடைய துன்பத்தை “நான்” என்ற கட்டுரையை எழுதும்போது 16 வருடங்கள் பின்னோக்கி சென்று நான் உணர்ந்தேன். அந்த அறிவில்லாத வாழ்க்கையை நினைத்தாலே அச்சமாக உள்ளது.
பொறியில் மாட்டிய சிங்கத்தை விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும் அது என்னை அருகில் விடாது. அதனால் நான் என்ற உணர்வில் மாட்டிக் கொண்டு துன்பத்தில் வாழும் பலரிடமிருந்து நான் விலகி சென்று விடுகின்றேன்.
நான் என்ற உணர்வை நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற கோட்பாடு மூலம் கழட்டி எறிந்து விட்டால் எந்த துன்பமும் நெருங்காது.
என்னுடைய பார்வையில் விஜய் முதல்வராக வலம் வருவதை பார்க்கும் பொழுது நான் என்ற உணர்வால் சிறை பிடிக்கப்பட்டு பல இரும்பு சங்கிலியால் தப்பிக்க முடியாதபடி கட்டி அழைத்துச் செல்வது போல் தான் தெரிகின்றது.
முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பார்க்கும் பொழுது நான் என்ற உணர்வால் பொறியில் சிக்கிய சிங்கம்போல் எனக்கு தெரிகின்றது.
இந்த உலகில் பலர் தேவையான அனைத்து செல்வங்களைப் பெற்றும் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாததால் ஆனந்தமாக வாழ வேண்டியவர்கள் துன்பத்தில் வாழ்கின்றார்கள்.

Leave a Reply